அஞ்சலி – பிரபஞ்சன்
மூத்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு மிகவும் மனதுக்கு வருத்தமளிப்பது. அவருடன் தனிப்பட்ட முறையில் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை என்றாலும் வெகு ஜென இதழ்களில் வெளிவந்த அவரது படைப்புகள் புதிய எழுத்தாளனான எனக்கு பலவற்றையும் கற்றுத் தந்தவை.
ஆண் எழுத்தாளர்கள் ஒன்று பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசவே மாட்டார்கள். இல்லை அவர்கள் எழுத்தைப் பாராட்டி எதுவுமே கூறாமல் விட்டு விடுவார்கள். பிரபஞ்சன் பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்து அவர்களுக்கு ஊக்கம் தந்து அவர்கள் நிறைய எழுதத் துணை நின்றவர். அவரது தந்தை ஸ்தானத்தை என் நட்பு வட்டத்தில் இருக்கும் இரு பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு தந்தையின் பரிவுக்காக, ஒரு தீவிர எழுத்துப் பயணத்துக்காக, அவரது தனித்துவம் மிக்க படைப்புக்களுக்காக அவர் என்றும் நினைவு கூரப் படுவார்.