பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு
திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். திரைப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி இரண்டாம் முறையாக அவன் கல்லூரியில் ஒழுங்கு மீறியதற்காக விசாரிக்கப் படும் காட்சி. கல்வியே வலிமை தரும் எனத் தான் இளமையிலேயே உணர்ந்ததை கல்லூரி முதல்வர் (தலித் ஆனவர்) குறிப்பிடுகிறார். அம்பேத்கர் வழி அதுவே என்றும். இது நேரடியாக முன் வைக்கப் பட்டது கலை அல்ல என்றாலும் இந்தச் செய்தி தலித் இளைஞர்களிடம் சென்று சேர்வது மிகவும் அவசியமானது. இன்று தலித் மையமான அரசியலில் இருப்போர் சமூக நீதியை வைத்து அரசியல் செய்யுங்கள் என்பதே அம்பேத்கரின் கனவு என்பது போல நடந்து கொள்கிறார்கள். வலிமையான ஒரு சமூகமே சமூக நீதியை சாத்தியமாக்க முடியும். என்று வலிமை தலித் மக்கள் உடன் அடையாளம் காணப் படுமோ அன்று சமூக நீதி என்பது கனவாக இருக்காது. திரைப் படத்தில் நான் ரசித்த மற்றொரு காட்சி நுட்பமானது. உண்மையில் நான் குறிப்பிட்ட காட்சிக்கு அடுத்ததாக வருவது. ஜாதி வெறி பிடித்த மேல் ஜாதி மாணவர்கள் அவன் தந்தையை நிர்வாணமாக்கி ஓட விடும் போது அவர் ஓடும் வழியில் ஏகப் பட்ட கட்சிகளின் கொடிகள் நிறைய துணியில் பறந்து கொண்டிருக்கும்.
ஒரு சினிமாக்கதை என்னும் போது எந்த தருக்கம் அல்லது நம்பகத் தன்மையையும் நாம் எதிர்பார்க்கக் கூடாதுதான். இருப்பினும் ஒரு இடம் நெருடத்தான் செய்கிறது, திரு நெல்வேலி போல ஒரு மா நகரத்தில் இப்படி ஒரு அ நியாயம் நடந்த பின் தலித் மக்கள் கொந்தளிப்பு மற்றும் தலித்களுக்கான கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டம்ம் வெடித்திருக்கும். என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்கும் அளவு கேவலமாய் இல்லை இன்றைய சூழல்.
எப்படி இருந்தாலும் கதையின் மற்றும் காட்சிப் படுத்தலின் துணிச்சல் மற்றும் கூர்மைக்காக நான் இயக்குனரைப் பாராட்டுகிறேன்.
(image courtesy:indiaglitz.com)