காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை


Image result for rajankurai images

காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை

மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. இன்று அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தார்மீக பலமும் அச்சமின்மையும் கொண்ட ராஜன்குறை அவரது கட்டுரையை வெளியிடும் மனுஷ் போன்றவர்கள் லட்சத்தில் ஒருவர். உயிர்மை ஏப்ரல் 2019 இதழில் ‘இயற்கை அழகும் இறையாண்மைச் சாபமும்’ என்னும் கட்டுரை மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் அவரது தரப்பை வெளிப்படுத்துவது. ஜம்மு பகுதி மதக்கலவரங்களால் ஹிந்துப் பெரும்பான்மைப் பகுதியாக மாற்றப் பட்டது மற்றும் ஜாதிவெறியால் பண்டிட்டுகள் தாய்மதம் திரும்ப விழைந்தோரைத் தடுத்தனர் என்னும் விவரங்கள் காஷ்மீர் பிரச்சனையின் மறுபக்கமாக அவர் வைப்பவை. அவை சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலகட்டத்தில் நிகழ்ந்தவை. ஆனால் எல்லைப்புற மாநிலம் ஒன்றின் இன்றைய பிரச்சனைகள் அண்டை நாட்டின் அரசியல் அமைப்பு, அதன் பண்பாட்டு மற்றும் கருத்துச் சுதந்திர செயற்பாடுகளால் மிகவும் பாதிப்பு அடைபவை. ராஜன்குறை நீளம் கருதியோ அல்லது சிந்தனை ஓட்டத்தின் சீர் கருதியோ வேறு தளத்தில் கட்டுரையை எடுத்துச் செல்கிறார்.

ராஜன்குறையின் கட்டுரையில் நடுநிலையுடன் இந்தியா பாகிஸ்தான் இருவரும் சேர்ந்து காஷ்மீர் தனி நாடு என விட்டு விட்டால் என்ன ஆகும் என்பதை விவாதித்திருப்பது இந்தக் கட்டுரை அரசியல் கோணத்தில் இதைக் காண்பதாகும். உண்மையில் இன்று ராணுவம் மற்றும் பொருளாதாரக் கேள்விகளை ஒரு சிறிய நாடு எதிர்கொள்வது – தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர்கொள்வது என்பது இயலாத ஒன்று.

கட்டுரையில் தேசம் என்பது மக்களின் எந்த மாதிரியான ஒருமைப்பாட்டால் கட்டமைகிறது என்பது எடுத்துக் கொள்ளப் படவே இல்லை. ராணுவம், இறையாண்மை ஆகிய விவகாரங்களின் அடிப்படை என்ன என்பதை நான் முற்றிலும் வேறு கோணத்தில் காண்கிறேன். பசுமை விழிப்புடைய ஒரு குழுவில் நான் ஒரு எளிய அங்கத்தினன். 2018ல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட போது ஒரு அதிர்ச்சியான விஷயம் அடிக்கடி வாட்ஸ் அப் குழுவில் பரிமாறப் பட்டது. சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப் படும் நிவாரணப் பொருட்களை ஒரு சில கிராமங்களே திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டார்கள். இரண்டாவது சில விஷமிகள் வண்டி மீது தமது ஊர் பெயரை ஒட்டி ஓட்டுனரை மிரட்டி தமது பகுதிக்கு இட்டுச் சென்றார்கள் என்பவை. ஒரு நிலப்பகுதி மக்கள், ஒரு இனக்குழு கூட்டுத் தன்னலத்தைக் கொடூரமாக வெளிப்படுத்தும் போது அவர்களிடமிருந்து பிற பகுதி மக்களை அல்லது அண்டை நில மக்களை என்ன சொல்லி, என்ன செய்து காப்பாற்றலாம்?

இந்தியாவின் சிறு மன்னர்களின் ராஜ்ஜியங்கள் சுதந்திரத்துக்குப் பின் இணைந்தது சுதந்திரப் போரில் முன்வைக்கப் பட்ட ஒருமைப்பாட்டின் அடிப்படையில் நிகழ்ந்தது. உலக அளவில் இரண்டாம் உலகப் போர் ஆயுதக் குவிப்பும் அணி சேருதலுமே பாதுகாப்பு என நிறுவியது. 90களுக்குப் பின் முழுவீச்சடைந்த தாரளமயமாக்கம், உலகமயமாக்கம் இவை பன்னாட்டு நிறுவனங்கள் உலகப் பொருளாதாத்தையும், நுகர்வோர் தேர்வையும் ஒருங்கே மேலாண்மை செய்ய வழி வகுத்தது. இன்று சிறு நாடுகள் முன் ஒரு ஒற்றை அடிப்பாதை மட்டுமே உண்டு. வளர்ந்த நாடுகளுக்கு ஒரு வண்டி போகும் அளவு அகலமான பாதை. ஆனால் தன் சுதந்திரப் படி பயணிக்கும் பாதை யாருக்குமே இல்லை.

‘தேசம் தவிர்ப்போ. நேசம் வளர்ப்போம்’ என்னும் கோஷத்துடன் கட்டுரையை ரா முடித்திருக்கிறார். தவிர்க்க இயலாதவற்றை விவாதித்து தான் என்ன ஆகப் போகிறது?

(image courtesy:youtube)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s