வித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி
திரும்பத் திரும்பப் பயன்படக் கூடிய சில தொழில் நுட்பங்கள் அதற்கான அடிப்படை தருக்க அறிவு மற்றும் ஆய்ந்து அறியும் திறன் இவற்றை மட்டுமே நம் போட்டித் தேர்வுகள் முன் வைக்கின்றன. பல துறைகளிலும் ஒரே மாதிரியான இத்தகைய அறிவுத் திறன் உள்ளோருக்கே கதவுகள் திறக்கப் படுகின்றன. உண்மையில் மனித் வாழ்க்கையின் தேவைகள் உயிர் வாழ்வதற்கான மற்றும் உடல் அடிப்படையிலான மற்றும் வசதிகள் அடிப்படையிலானவை மட்டுமல்ல. வெவ்வேறு அறிவுத்திறன்கள் இருக்கின்றன. அவற்றை அங்கீகரிக்காத போது அந்தத் திறன் உடையோர் கொள்ளும் வலியையும் இந்தக் காணொளி பதிவு செய்கிறது. பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.