கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்


கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்

பாரதி மூர்த்தியப்பனின் கவிதைகள் மற்றும் இணைய தளம் வெகு தாமதமாகவே என் கவனத்துக்கு வந்தவை. அவரின் இரண்டு கவிதைகளை விமர்சிக்க நினைக்கிறேன். முதல் கவிதை ‘ஒரே நேர் கோட்டில் அல்ல’. அதற்கான இணைப்பு ————- இது. இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்தது நேரடியான மொழியில், எளிய சொற்களில் அவர் சற்றே கனமான ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கவிதை இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று ஆண்-பெண் உறவில் உள்ள அதிகாரப் பகிர்வுகள், சமரசங்கள் மற்றும் நிழல் யுத்தம். இதற்கு இணையான கனம் கொண்ட விஷயம் சமூக மிருகம் என மனிதன் அழைக்கப் படுவதன் உட்பொருள். வன்முறை அல்லது கட்டுக்கடங்காப் போக்கு இவை மட்டுமா நம்மால் மிருகத் தன்மை என்று காணப் படும்? உண்மையில் நம் தரப்பை, நம் மனதை, நம் சொரணை காயப் படுதலை முற்றிலும் புறந்தள்ளும் குருட்டாந்தனமான போக்கை நாம் அதிகமும் மிருகத் தன்மையுடையதாகக் காண்கிறோம். இதை நான் எனக்குள் இருந்து தூக்கி எறிந்தேனா? இயலுமா? இல்லை இரண்டாம் – மூன்றாம் நபர் இதைக் கழற்றி வைப்பார் என நான் எதிர்பார்க்க இயலுமா? அவருக்கும் அது சாத்தியமா? இது சற்றே ஆன்மீகத்தில் உயரும் முனைப்பில் கவிதை முன்னகரும் இடம். நல்ல படைப்பு.

இரண்டாவதாக நான் வாசித்தது ‘ நீட்சேயின் வாசகர்கள்’. அதற்கான இணைப்பு ——————– இது.

ஜெர்மானியத் தத்துவ ஞானி நீட்சே இன்றளவும் மனிதனின் தனித்தன்மை மிக்க ரசனை மற்றும் அதன் வழி அவன் பண்பாட்டுடன் பொருந்துதல் பற்றிய பதிவுகளுக்காக விவாதிக்கப் பட்டு வருபவர். அவரது இரண்டு வாசகர்களுமே தமது குருமார்களின் அழிச்சாட்டியமான பிம்பத்துடன் ஒத்துப் போக இயலாமல் குருவை நீங்கியவர்கள். ஏன் நீங்கினார்கள் என்பது மிக அங்கதமாகக் கூறப் பட்டிருக்கிறது. உண்மையில் முதற்கவிதையுடன் ஒப்பிட இது மிகவும் நுட்பமானது. நல்ல சிந்தனையும் அசல் தேடலும் உள்ள பலருமே குரு என்று யாரையேனும் குறிப்பிட்டுத் தமது தரப்பை தாரை வார்த்துவிடுவதைப் பார்க்கிறோம். குரு-சிஷ்ய பரம்பரை என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு அபத்தம். அது கலைகளுக்கு (பயின் கலைகளுக்கு மட்டும்) ஓரளவு பொருந்தும். தத்துவம் ஆன்மீகம் இவை சுயமான தேடலில் அயராக் கடும் முயற்சியில் வசப் படுபவை. இந்த ஒன்று அவருக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது சற்று வித்தியாசமான பெண் எழுத்தாளர் என்பதையே காட்டுகிறது. கவிதைகளின் பலம் அவை முன்முடிவுகளால் ஊதப் பட்ட ராட்சத பலூங்களைக் கூரான எழுத்தாணிகளால் நையச் செய்யும் வீச்சுடயவை. அந்த வீச்சு உள்ளவர் இவர். வாழ்த்துக்கள்.

 

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s