வெற்றி அமைப்பின் இந்தச் செய்தியைப் பகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி.
துவங்குகிறது வனத்துக்குள் திருப்பூர் -5
ஒரு லட்சம் மரங்கள் நட்டு இரண்டு வருடம் பராமரிப்பு என்றளவில் துவங்கிய வெற்றி அமைப்பின் திட்டம் வனத்துக்குள் திருப்பூர், முதல் வருடம் 1 லட்சத்து 35 ஆயிரம் என்று இலக்கையும் தாண்டியது, தொடர்ந்து கொடையார்களின் பங்களிப்பும், தன்னார்வலர்களின் ஆர்வமும் அடுத்த வருடமும் திட்டத்தை தொடர செய்தது, இரண்டு லட்சம் மரங்கள் என களமிறங்கி 2 .25 லட்சம் மரங்கள் என்று இலக்கை தாண்டியது. கன்றுகளின் வளர்ச்சியையும் , பராமரிப்பையும், மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த கொடையாளர்களின் தொடர் ஆதரவு இதுவரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 6 .67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு 90 % மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ளது. முதல் வருடம் நடப்பட்ட கன்றுகள் இன்று 20 அடிக்கும் உயரமான மரங்களாக வளர்ந்துள்ளன.
மரம் நடுவதை ஒரு வேள்வியாக கொண்டு இயங்க துவங்கியதால் படிப்படியாக பல்வேறு நடைமுறை சிக்கல், செலவீனங்களை குறைத்தல், பிரத்தியேகமான நாற்று பண்ணை, குறைந்த தண்ணீர் செலவில் மரம் வளர்த்தல் என ஒவ்வொரு நாளும் எங்களை நாங்களே தகவமைத்துக்கொண்டு பயணிக்கின்றோம்.
இந்த வருடம் நடுவதற்காக 1 .50 லட்சம் நாற்றுகள் பண்ணையில் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இதற்கான வேலைகள் 2 வாரங்களுக்கு முன்னர் இயற்கை பேராற்றலை வணங்கி துவக்கியுள்ளோம்.
2020 ம் ஆண்டுக்குள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரங்கள் என்பது இலக்கு.
தொடர்ந்து பயணிப்போம் அனைவரின் பேராதரவுடன் , வாழத்தகுந்த பூமியை சந்ததிகளுக்கு விட்டு செல்ல.