காலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்
மூத்த வரலாற்றறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் புது டெல்லி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகப் பேராசிரியர். மருதன் மிக விரிவான ஒரு நேர்காணலைச் செய்திருக்கிறார். ஊடகங்களில் மற்றும் வலதுசாரிகளின் பதிவுகளில் அவரை இடதுசாரி அறிவுஜீவி என முத்திரை குத்துவதுண்டு. ஆனால் அவர் பதில் ஒரு இஸத்தின் அடிப்படையான கண்ணோட்டம் அல்லது பார்வை மூலம் வரலாற்றின் நுட்பத்தையும் ஆழத்தையும் சென்று அடைதல் இயலாத ஒன்று என்பதே. அதே சமயம் வரலாற்றின் பொருளாதர பரிமாணத்தை மார்ஸ்ஸியம் வைத்து ஆய்வு செய்ய இயலும். ஆரிய-திராவிட சர்ச்சை குறித்த அவரது அணுகுமுறையையே நான் மிகவும் வியப்பாகக் காண்கிறேன். அவர் எந்த முடிவையும் நாம் எட்டவே இயலாது என்றே கருதுகிறார். ஏனெனில் நாம் ஆயிரம் அல்லது பல்லாயிரம் ஆண்டுகளான வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும் போது யூகமே அதிகம் செய்ய இயலுமே ஒழிய நிறுவ இயலாது. கடந்த காலத்தைப் பற்றிய நல்ல தெளிவை அளிபதே வரலாறு எனத் தமது நேர்காணலை நிறைவு செய்கிறார்.
மருதன் கேள்விகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். அவை நாம் தாப்பர் அவர்களின் திசை மற்றும் வரலாற்றியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக முக்கியமான விஷயங்கள் இரண்டையும் அவர் பதிலாகத் தரும் படி அமைந்திருந்தன. என் கருத்தில் முழு நேர்காணலையும் அவசியம் படிக்க வேண்டும். மிக மிக விரிவானது. தெளிவானது. நடு நிலையானது. கல்வி கல்வியாளர் கையிலிருந்து அரசியல்வாதி கைக்குப் போனதை மிகவும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுள்ள அறிஞர் மற்றும் சிந்தனையாளர் தாப்பர்.
(image courtesy:indiafacts.org)