மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்


மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்

மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூரின் கவிதைகள் திசை எட்டும் இதழ் வாயிலாக வாசிக்கக் கிடைத்தன. ’புலி வந்த போது’ என்னும் அவரது கவிதை கீழே:

”புலியல்லாவா வருகிறது? ஏன் கூச்சல் போடவில்லை?”
ஆடுமேய்ப்பவனிடம் கேட்டேன்.
”ஆடுகள் மேய்கின்ற
இந்த மலைச்சாரல் புலிக்குச் சொந்தம்
ஆடுகளையெல்லாம் வளர்ப்பதே புலிதான் 
ஏன், நானேகூட
புலியிடம் சம்பளம் பெறுபவன்
பின்னர் எதற்குப் பயம்?”

ஆடுமெய்ப்பவன் சொல்லி முடிக்கும் முன்
புலியின் நகம் என் கழுத்தில் 
அழுந்தியிருந்தது. 

ஐம்பது சொற்கள் கூட இருக்காது. மூன்று விதமான பொதுமக்கள் நம்முன் 
கவனப் படுத்தப் படுகிறார்கள். வயிற்றைக்கழுவ ஒரு வேலைக்காகவே 
உருவாக்கப் படுவர்கள், அவர்களை மேய்க்கும் கங்காணிகள் மற்றும் 
சுதந்திர சிந்தனையும் இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டும் என்ற 
உத்வேகம் உள்ள வேறு சிலர். அவர்களைப் புலி பாய்ந்து வந்து பிராண்டக்
காத்திருக்கிறது. 

கவிதையில் நம்மை மிகவும் தொடும் விஷயம், புலி வருது என்று அஞ்ச 
வேண்டியதே இல்லை. ஏனென்றால் புலியின் நேரடிக் கட்டுப்பாட்டில் 
எப்போதும் இருக்கிறோம். இன்று பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நுட்ப
வல்லுனர்கள் மக்களின் வேலை, வாழ்க்கைத்தரம், பொருளாதார அளவு
கோல்கள் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். அரசுகள் அவர்களுக்கும்
மக்களுக்கும் நடுவே இடைத் தரகர்கள் அல்லது கங்காணிகள். மக்களின் 
சிந்தனையை சமூக ஊடகங்கள் வழி மேலாள்வதை பல மதவெறி, 
ஜாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட குழுக்கள் ஏற்கனவே
வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றன. இவை அத்தனையும் ஒரே 
கவிதைக்குள்ளே கூர்மையாய் வெளிப்பட்டிருப்பது கவிஞரின் வெற்றி.

குறிஞ்சிவேலன் பல பொருளாதார நெடுக்கடிகளுக்கிடையே, பன்மொழி, 
பன்னாட்டு இலக்கியங்களை திசைஎட்டும் இதழில் நமக்குத் தந்து வருகிறார்.
04142258314, 258012 எண்களில் அவரைத் தொடர்பு கொள்ளலாம். சந்தா
செலுத்தலாம். நாம் மிகவும் மதிக்கும் இலக்கியவாதிகளுள் அவர் ஒருவர். 














 

 

 

 

 

 

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s