மரமும் நீர்நிலையே


download

வணக்கம் நண்பர்களே

நாம் எவற்றையெல்லாம் நீர் நிலைகள் என்கிறோம்?

கடல்கள், ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள் என்றுதான் நாம் நினைப்போம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை மரங்கள் நிறைந்த மலைகள் காடுகள் இவையே நமக்குப் பயன்தரும் நீர் நிலைகள்.

ஒரு எடுத்துக்காட்டு

இப்போது நாம் முருங்கை இலைகள் பறித்துக் காய வைத்து இலைப் பொடி விற்பனை செய்கிறோம். 12 கிலோ பச்சை இலை பறித்து நிழலில் காய வைத்தால் நான்கு நாட்களில் ஒரு கிலோவாக எடை குறைந்து விடுகிறது.

இதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். பச்சையாக இருக்கும் 12 கிலோ இலையில் தண்ணீர் மட்டுமே 11 கிலோ இருக்கிறது. திடப் பொருள் ஒரு கிலோ மட்டுமே. 11 கிலோ என்றால் 11 லிட்டர் தண்ணீர். ஒரு கிலோவுக்கு இந்தக் கணக்கு!

எல்லா மரங்களுக்கும் இந்தக் கணக்கு ஏறக்குறையப் பொருந்தும். முருங்கை மிகச் சிறிய மரம். பெரிய மரங்கள் அல்லது மருது வேம்பு, ஆல், அத்தி, நாவல், இலுப்பை போன்ற பிரம்மாண்டமான மரங்களை நினைத்துப் பாருங்கள். ஒரு பெரிய மரத்தில் இலைகள் மொத்தம் கணக்கிட்டால் ஆயிரக்கணக்கான கிலோ இருக்குமே!

இப்போது சொல்லுங்கள்! நாம் மரத்தின் அடியில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தால் நம் தலைக்கு மேல் அடர்ந்து காணப்படுவது வெறும் இலைகளா அல்லது இலைகள் தமக்குள் பிடித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரா? அத்தனை தண்ணீரை நம் தலைக்கு மேல் குடையாகப் பிடிக்க மரங்களால் மட்டுமே தான் முடியும்.

பத்தாண்டு கடந்த ஒரு பெரு மரம் தனக்குள் 27000 லிட்டர் தண்ணீர் பிடித்து வைக்க முடியும் என்கின்றனர். இந்தத் தண்ணீர் அதிக வெப்பத்தால் ஆவியாகாது. அதைப் பாதுகாக்க நாம் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. தன் தலையில் படும் சூரிய ஒளியின் துணை கொண்டு நமக்கு உணவு முதல் அனைத்தும் தருகிறது.

மரங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே குளிர்ச்சி. அவை தேக்கி வைத்திருக்கும் தண்ணீரால் மட்டுமே இது நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.

ஆனால் அணையைக் கட்டியோ குளம் வெட்டியோ மழை நீர் சேமிக்கிறோம் என்றால் அதைத் தெர்மோக்கோல் போட்டு மூடி ஆவியாகாமல் தடுக்க வேண்டியுள்ளது.

பூமியெங்கும் மரங்கள் நடுவோம். தண்ணீரைச் சேமிப்போம். வேறு வேலைகள் எல்லாம் வீண் போலவே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு பெரு மரம் தேக்கி வைத்திருக்கும் தண்ணீர் 20,000 லிட்டர் என்க. ஒரு ஏக்கரில் குறைந்தது 20 மரங்கள் இருந்தால் இப்போது அங்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் என்னும் விலை மதிக்க முடியாத சொத்து நம் கண் முன்னே நின்று கொண்டு நமக்கு எல்லாம் தந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படியான பூமியை நாம் உருவாக்கினால் நிச்சயமாக தண்ணீர்ப் பஞ்சம் எப்போதும் வராது. மீண்டும் ஓடைகளும் ஆறுகளும் குளங்களும் எப்போதும் தண்ணீருடன் காணலாம். ஆழ்துளைக் கிணறுகள் தேவைப்படாது.

பகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி.

ஒரம்பூறித் தண்ணீர் மேலேயே நிலத்தில் இருக்கும் காலம் மீண்டும் வருமா?

(புகைப்படத்துக்கு நன்றி unsplash.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in பசுமை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s