ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்
டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாசிரியர் நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். எனக்கும் சில வருடங்கள் முன்பு அவருடன் தொடர்பு இருந்தது. இனிமையானவர். இளைஞர். நிறைய சாதிக்கும் ஊக்கம் உள்ளவர். அவருடன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஜூரோடிகிரி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ராம்ஜியின் உரையாடல் யூடியூபில் காணக் கிடைத்தது. அதற்கான இணைப்பு —————————– இது.
தமிழ் நூல்கள் பிற மொழிகளில் வாசிக்கப்பட வேண்டும், நல்ல உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பில் தமிழ் நூல்கள் வெளிவர வேண்டும், மலையாளம் மற்றும் வங்கம் போல தமிழ் நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு மரியாதை வேண்டும். பலகாலமாக மறுபதிப்பாகாமற் போன அரிய நூல்கள் மீண்டும் வர வேண்டும். இப்படி பல கனவுகளுடன் தீவிரமாக இயங்கும், வெளிப்படையாகப் பேசும், தரமான வெளியீடுகளைக் கொண்டு வரும் ராம்ஜி நம்பிக்கை நட்சத்திரம். வேடியப்பன் தமது கருத்துக்களை நேர்காணலில் பகிர்கிறார். இருவரும் தமிழ் வாசிப்பைப் புதிய உச்சங்க்களுக்கு எடுத்துச் செல்ல வல்லவர்கள்.