ஷார்ஜா புத்தக் கண்காட்சியில் ஜூரோ டிகிரி பதிப்பாசிரியர் திருமதி காயத்ரியை நல்ல வாசிப்புப் பின்னணி உள்ள ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி.ப்ரியா எடுத்துள்ள நேர்காணலுக்கான இணைப்பு ——————————– இது.
தமிழுக்குப் பிற மொழி நூல்கள் மற்றும் பிற மொழிகளுக்குத் தமிழ் நூல்கள் என்னும் கனவை காயத்ரி வைத்திருக்கிறார். மிகவும் நல்ல விஷயம். பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய பதிப்பகம் ஜூரோ டிகிரி. காயத்ரி இளைஞர். மொழிபெயர்ப்பின் தரம் மற்றும் தர்மம் பற்றி இவருக்கு இருக்கும் தெளிவு அபாரம். மிகவும் அரிய நோக்கு. தமிழ் பதிப்புலகில் நம்பிக்கை தரும் காலத்தில் நாம் இவ்விளைஞர்களால் அடியெடுத்து வைக்கிறோம்.