போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2019
முதல் பரிசு – வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா
இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை.
மூன்றாம் பரிசு – நில் – முத்துச்செல்வன்
கூடுதல் பரிசுகள்:
================
1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் – அ.கரீம், கோவை
2. அவள் ஒரு பூங்கொத்து – தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா.
சான்றிதழ் பெறும் கதைகள்:
====================
1. தாய்க்கோழி – சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு – பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் – ஐ.கிருத்திகா, திருச்சி.
====================
1. தாய்க்கோழி – சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு – பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் – ஐ.கிருத்திகா, திருச்சி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
தேனி மாவட்டக்குழு.
போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றுள்ளது எனது ‘தப்புதான் ’ என்னும் சிறுகதை. திருநங்கையினர் நலம் தொடர்பான ஒரு தன்னார்வக் குழு சென்ற வருடம் மத்தியில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தார்கள். அதற்கு ‘வாடாத நீலத் தாமரைகள்’ மற்றும் ‘தப்புதான்’என இரு சிறுகதைகளை அனுப்பி இருந்தேன். இரண்டு கதைகளும் அவர்கள் தேர்வில் வெல்லவில்லை. ஆனால் தப்புதான் கதையை அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா? எனவே அதன் பின் வந்த இவர்களது அறிவிப்பைப் பார்த்து அனுப்பினேன். எனக்கு மன நிறைவு தந்த கதை.
அன்பு வாசகர்களே! தப்புதான் கதையை நான் ஏன் இங்கே வெளியிடவில்லை? அந்த அமைப்பினர் வெளியிடும் போது நீங்கள் விலை கொடுத்து வாசிக்க வேண்டும். என் படைப்புகளை சமீபகாலமாக நான் இந்தத் தளத்தில் வெளியிடாததற்குக் காரணம் நீங்கள் என் புத்தகங்களைப் பதிக்கும் பதிப்பகத்தாருக்கு, புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி ஊக்கம் தாருங்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அமைப்பினருக்கு என் நன்றி.