ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் எனது (எளிய ஆனால் கூர்மையான) இலக்கிய ஆய்வு நூல் விரைவில் மின்னூல் மற்றும் அச்சில் வர இருக்கிறது. விரைவில் அதன் விவரங்களைப் பகிர்வேன்.
காவியச் சுவைக்காகவோ பக்திரச அடிப்படையிலோ அன்றி மிகவும் கொண்டாடப் படும் ராமாயண கதாபாத்திரங்களின் முரண்கள் என்ன எனும் ஆய்வே இந்நூல். கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், துளஸிதாஸரின் ராமசரித மானஸ் ஆகிய மூன்றும் நூல்களும் “தனிமனிதனா? சமுதாய அங்கமா? எது ஒருவரின் அடையாளம்?” என்ற ஒரே கேள்வியின்கீழ் ஒப்பாய்வுக்குட்படுகின்றன. அதில் காப்பியத்தின் முக்கிய கதாபாத் திரங்களின் பல்வேறு முரண்கள் வெளிப்படுவதால் நமது தொன்மத்தை நாம் மேலும் மேம்பட்ட புரிதலுடன் அணுக முடிகிறது. திண்ணை இணைய தளத்தில் தொடராக வெளிவந்து வரவேற்பைப் பெற்றது.