About

சத்யானந்தன் பற்றி
photo
இயற்பெயர்: முரளிதரன்
வசிப்பது: சென்னை

சத்யானந்தன் கவிஞர். புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளரும்.. பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக காலச்சுவடு , தீராநதி , சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதிய கோடாங்கி, இலக்கியச் சிறகு ,கனவு உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும், திண்ணை மற்றும் சொல்வனம் ஆகிய இணைய தளங்களிலும் தீவிரமாகத் தன் இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். குறிப்பாகத் திண்ணை இலக்கிய இணைய தளத்தில் இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை. திண்ணையில் தொடராக “ஜென் ஒரு புரிதல்”, முள்வெளி- சமூக நாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை இவைகள் அச்சு வடிவத்தில் வராதவை.

அச்சில் வெளிவந்த படைப்புகள்

புருஷார்த்தம்- நாவல் (2000)
வெளியே வீடு – கவிதைத் தொகுதி (2003)
விக்கிரகம்- நாவல் (2006)

இணைய தளத்தில் வெளிவந்த படைப்புகள் (நூல்கள்)

2011-ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி- ஆராய்ச்சிக் கட்டுரை (திண்ணையில் தொடராக வெளியானது). இந்தத் தளத்தில் கிடைக்கும்

2012-முள்வெளி – நாவல் (திண்ணையில் தொடராக வெளியானது.) இந்தத் தளத்தில் நாவல் -categoryயில் தேடினால் எல்லா அத்தியாங்களும் கிடைக்கும்)

2013-போதி மரம்- சரித்திர நாவல் (திண்ணையில் தொடராக வெளியானது.) இந்தத் தளத்தில் கிடைக்கும்.

2010க்குப் பிறகு சத்யானந்தன் எழுதிய எல்லாக் கட்டுரைகள் கதைகள் கவிதைகள் இந்தத் தளத்தில் இருக்கின்றன. கவிதைத் தொகுதி இரண்டாவது இன்னும் அச்சில் வரவில்லை. திண்ணை மற்றும் சொல்வனம் ஆகிய தளங்களில் வெளியான கவிதைகள் மற்றும் கதைகளை category- கவிதை – சிறுகதை எனச் சொடுக்கி வாசிக்கலாம். சிறுகதைகள் எல்லாமே இந்தத் தளத்தில் உள்ளன. தனியே தொகுதி அச்சில் வரவில்லை. http://www.pratilipi.com/ இணையத்தில் ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி மற்றும் சரித்திர நாவல் போதி மரம் வெளியிடப் பட்டுள்ளன.

சமகால எழுத்துக்களை விமர்சித்து கவனப்படுத்துவதும், கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை என வித்தியாசமான வடிவங்களில் படைப்பளிப்பதும் இவரது சிறப்பம்சங்கள்.

வாசகர் வட்டம் இல்லை. sathyanandhan.mail@gmail.com வழி தொடர்பிலிருக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s