Category Archives: திருக்குறள்

உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு


உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் எது உண்மை? எந்த உண்மையைச் சொல்ல வேண்டும்? இவை தான் பல மனித உறவுகளை, பல நல்ல திருப்பங்களைத் தீர்மானிக்கின்றன. 2006ல் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததை அறிவிப்பாளர் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

துறவிக்கு மட்டுமே தவம் சாத்தியமா? -திருக்குறள் தெளிவு


துறவிக்கு மட்டுமே தவம் சாத்தியமா? -திருக்குறள் தெளிவு உற்றநோய் நோன்றல் உயிக்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் உரு (அதிகாரம் தவம்) நோன்றல் -சகித்துக் கொள்ளுதல் உயிர்க்குறுகண் செய்யாமை- பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமை பொருள்: வலிகளை சகிப்பதும், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமல் வாழ்வதும், இவை இரண்டுமே தவத்தின் அடையாளங்கள் ஆகும். தவம் என்ற சொல்லை … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , | Leave a comment

எப்படியும் வென்றால் தவறா? – திருக்குறள் தெளிவு


எப்படியும் வென்றால் தவறா? – திருக்குறள் தெளிவு வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து பொருள்: உன்னிலும் மெலியவரைத் தாக்க நீ நும் செல்லும் போது உன்னிலும் வலியர் (இதையே உனக்குச் செய்யக் கூடும்) பற்றி நினைவிற் கொள்வாய். (அதிகாரம்: அருள் உடைமை) பொருளோ, புகழோ, அதிகாரமோ நமது வலிமையைப் பொருத்தே அமையும். … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

உள் நோக்கத்துடன் வழங்கப்படுவது ஈகையாகுமா? -திருக்குறள் தெளிவு


ஈகை வறியார்க்கொன் றீவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து குறியெதிர்ப்பை – பிரதி பலனைக் குறி வைத்து நீர துடைத்து – ஒப்பிடக் கூடியது பொருள்: ஏழைகளுக்கு எதையேனும் கொடுப்பதே ஈகை எனப்படும். ஏனையவருக்குக் கொடுப்பதெல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும். திருமணங்களில் மொய் எழுதும் போது கவனிக்கலாம். திருமணம் நடத்துபவர் தமக்கு என்ன … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

நடைபிணமாய் வாழ்வதா ? -திருக்குறள் தெளிவு


ஒப்புரவரிதல் – பிறர் நலம் பேணல் ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் ஒத்தது – பிறரின் நிலையை தனது நிலையாகக் காணும் ஒத்தறிவு பொருள்: பிறரின் நிலையைத் தனதாகக் கண்டு உணரும் (அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யும்) மனிதன் உயிர் வாழ்பவன். ஏனையர் நடைபிணங்களே. (செத்தாருள் வைக்கப்படும் என்று உயிருள்ளவரைக் குறிப்பிடுவதால் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

தோற்றால் தொலைத்துக் கட்டி விடுவார்கள் – திருக்குறள் தெளிவு


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று தோற்றால் தொலைத்துக் கட்டி விடுவார்கள் – திருக்குறள் தெளிவு தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று பொருள்: ( ஒரு துறையில் ) தோன்றும் போது பலரும் புகழும்படியான நிலையில் தோன்றுங்கள். அப்படிப்பட்ட திறமை பெறும் வரை தோன்றாமல் இருப்பதே நல்லது. தோனி … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

வெளிவேடம் பற்றி எச்சரிக்கை -திருக்குறள் தெளிவு


வெளிவேடம் பற்றி எச்சரிக்கை -திருக்குறள் தெளிவு மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் இந்தியாவில் காவி உடை அணிந்தோரும், மேலை நாட்டில் வெள்ளை உடை அணிந்தோருமான பல மதத் துறவிகளின் லீலைகளை, மீறல்களைப் பற்றிப் படிக்கிறோம். அரசியல்வாதிகள் இந்தியாவில் ஏறத்தாழ அனைவருமே வெள்ளை உடை அணிபவர்கள் தான். வேடங்களும், தோற்றங்களும் நம்மை எளிதில் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

யார் மேல் ஜாதி? திருக்குறள் தெளிவு


யார் மேல் ஜாதி? திருக்குறள் தெளிவு ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் அடிக்கடி நாம் தொலைக் காட்சி செய்திகளில் பார்ப்பது போலி நிதி நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் பொய்யான வாக்குறுதிகளில் நிறைய பணம் சேர்த்து ஏமாற்றும் போது கைதாகி நீதிமன்றம் செல்லும் காட்சி. அப்போது அவர்கள் தம் முகத்தை மறைத்துக் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

யார் பெருமைக்குரியவர்? -திருக்குறள் தெளிவு


நடுவு நிலைமை – திருக்குறள் தெளிவு தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தார் காணப் படும் தக்கார் – தகுதியானவர் அல்லது பெருமைக்குரியவர் எச்சம்- எச்சம் என்றால் மிகுதி அல்லது மீந்தது என்று பொருள். இங்கே அது அவர் வாழ்ந்த நாட்களுக்குப் பிறகு அவர் பெயர் நிலைத்திருக்கு எஞ்சிய நாட்கள் என்று பொருள் படுகிறது. சினிமா … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

ஒரு உதவியின் பெருமையை எது தீர்மானிக்கிறது? – திருக்குறள் தெளிவு


செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் தெளிவு உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து உதவியைப் பெறுபவரின் சால்பு அதாவது பண்பைப் பொருத்தே உதவியின் பெருமை அல்லது மகத்துவம் அமைகிறது என்பது பொருள். ரத்த தானம் செய்வதை ஒரு பழக்கமாகவே கொண்டவர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியும். முன்பின் அறியாத ஒருவர் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment