Category Archives: சிறுகதை

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் சிறுகதைத் தொகுதி ‘தோல் பை”


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்     Advertisements

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

‘வலம்’ இதழில் எனது பின் நவீனத்துவ சிறு கதை ‘சிறகுகளின் சொற்கள்’


நவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் நவீனத்துவச் சிறுகதையை வெளியிட்ட வலம் இதழுக்கு நன்றி. கதையைப் படிக்கும் முன்- பின் நவீனத்துவம் என்பது வாசகனுக்குப் பரிச்சயமான, பழக்கமான வாசிப்பு முறையைத் தாண்டி அவரது கற்பனையுடனான வாசிப்பைக் கோருவது. படைப்பாளி, கதையின் பிரதி மற்றும் கதையின் வடிவம் இவை யாவுமே கட்டுடைக்கப் பட்டு வாசகனும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில்


எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் bangalorereview  என்னும் இணைய இதழில் தோல் பை ‘ சிறுகதை வெளியாகி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்தின் நுட்பத்துக்கு ஒரு உதாரணமான கதை. புதிதாய் எழுத வருவோருக்கு சாத்தியங்கள் பற்றிய ஒரு சாளரத்தைத் திறப்பது. முதன் முதலாய் இதை வெளியிட்ட … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

யாழ் ‘கலை முகம்’ இலக்கிய இதழில் என் சிறுகதை


‘சூஹா ஜால்’ சிறுகதையை வெளியிட்ட யாழ்ப்பாண ‘கலை முகம்’ இதழுக்கு நன்றிகள் பல. சூஹா ஜால் சத்யானந்தன் “மாமா… எந்திரிங்க​… டீ ரெடி,” வேலு என்கிற​ வேலப்பன் என்னை எழுப்பிய​ போதுதான் நான் விழுப்புரத்தில் இல்லை, நள்ளிரவே சென்னைக்கு வந்து விட்டேன் என்பது உறைத்தது. இரவு எட்டு மணிக்கே செண்பகா என்னுடைய​ பயணப் பையைத் தயார் செய்து விட்டாள். … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

‘வலம்’ இதழில் என் சிறுகதை


ஜூலை 2017 இதழில் என் சிறுகதையை வெளியிட்ட வலம் சிறுபத்திரிக்கைக்கு என் நன்றிகள். சாகபட்சிணி   –  சத்யானந்தன்   லத்தி இரும்புக் கிராதிக் கதவை ஓங்கித் தட்டிய சத்தத்தில் விழித்தவுடன் கல்யாணிக்கு பக்கத்து அடைப்பில் சிறைபட்டவள் நினைவுதான் முதலில் வந்தது. நேற்று மாலை அவள் அடைக்கப்பட்டு பெண் காவலாளி மறைந்ததும் சத்தமாக, “யாருடி நீ? … Continue reading

Posted in சிறுகதை | Tagged , | Leave a comment

குருஷேத்திரம் – சிறுகதை


குருஷேத்திரம் –சத்யானந்தன் காலை மணி ஆறு. கோவிலின் பெரிய இரண்டு முன்வாயிற் கதவுகளில் ஒன்று ஒருக்களித்ததுத் திறக்கப்பட்டிருந்தது. பூக்கடைகள் மூடியிருந்தன. வாகன நிறுத்த மைதானம் காலியாயிருந்தது. அதன் எதிரே பழைய கட்டடத்தில் இருந்த காவல் நிலையத்துக்குள் நுழைந்து பழகிய தோரணையில் உள்ளே போனான் பாபு. “யார்ரா நீ ?” “எஸ் ஐ சாரைப் பாக்கணும்“ “உம்பேரு … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

மான் கறி – சிறுகதை


மான் கறி —- சத்யானந்தன்  சந்திரசேகர் ‘அசோக் பில்லர்’ நெருங்கும் போதே மேற்சென்று அலுவலகம் போக வேண்டாம் என்று முடிவெடுத்தான். பில்லருக்கு அருகிலுள்ள பூங்காவை ஒட்டி இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான். எதிரே டீக்கடையில் தேநீரை வாங்கி வெளியே நின்றபடி குடித்தான். கடைக்குள்ளே நிறைய பேர் இருந்தனர். பூங்காவுக்குள் ஓரிரு வயதானவர்களின் நடைப்பயிற்சி தவிர நடமாட்டம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’


காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

ஆணிகள் உதிர்க்கும் கால்கள்


(பிப்ரவரி 2017 இதழில் இந்தச் சிறுகதையை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்திய ‘தீராநதி ‘ பத்திரிக்கைக்கு என் நன்றிகள் ) கதைக்குறிப்பு குழந்தைத் தொழிலாளிகளின் அவல வாழ்க்கை, அவர்களை வேலைக்குத் தள்ளும் குடும்பச் சூழல் ,அந்தக் குடும்பத்தின் கையறு நிலை பற்றி அக்கறையில்லாத மேல்தட்டு மக்களின் படிப்பறிவின் குறுகிய அணுகுமுறை இவை மூன்றுமே இந்தக் கதையில் விரிவாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்


  ‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண் சிறு பத்திரிக்கைகள் என அழைக்கப்படும் இலக்கிய இதழ்கள் மிகவும் குறைவான பிரதிகள் வழி தீவிர இலக்கியத்தை வளர்த்தன. இப்போதும் சில சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. இடமின்மை மற்றும் அரசியல் சார்பும் தனி ஆளுமையின் தாக்கமும் இந்த இதழ்களில் உண்டு. ஒரு அளவுக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment