Category Archives: சிறுகதை

காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’


காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

ஆணிகள் உதிர்க்கும் கால்கள்


(பிப்ரவரி 2017 இதழில் இந்தச் சிறுகதையை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்திய ‘தீராநதி ‘ பத்திரிக்கைக்கு என் நன்றிகள் ) கதைக்குறிப்பு குழந்தைத் தொழிலாளிகளின் அவல வாழ்க்கை, அவர்களை வேலைக்குத் தள்ளும் குடும்பச் சூழல் ,அந்தக் குடும்பத்தின் கையறு நிலை பற்றி அக்கறையில்லாத மேல்தட்டு மக்களின் படிப்பறிவின் குறுகிய அணுகுமுறை இவை மூன்றுமே இந்தக் கதையில் விரிவாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்


  ‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண் சிறு பத்திரிக்கைகள் என அழைக்கப்படும் இலக்கிய இதழ்கள் மிகவும் குறைவான பிரதிகள் வழி தீவிர இலக்கியத்தை வளர்த்தன. இப்போதும் சில சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. இடமின்மை மற்றும் அரசியல் சார்பும் தனி ஆளுமையின் தாக்கமும் இந்த இதழ்களில் உண்டு. ஒரு அளவுக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

சாம்பியன்


சாம்பியன் –சத்யானந்தன் “நான் இப்போது அனுப்பிய எண் நம் சுமதியின் தோழி தாராவின் அம்மாவுடையது. தாராவின் மூன்றாம் பிறந்த நாள் இரவு ஒன்பது மணி அளவில் முடியும். சுமதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள். குழந்தைக்கான பரிசை நான் அவர்கள் வீட்டில் சுமதியை விடும் போதே கொடுத்து விட்டேன்.“ மின் தூக்கி ஆறு மாடிகள் இறங்கும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை


சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை … Continue reading

Posted in கவிதை, சிறுகதை, விமர்சனம் | Tagged | Leave a comment

பெயரில்லாதவள்


பெயரில்லாதவள் – சத்யானந்தன் “உன் பேரு ராணியா கலாவா?” ஓர் ஆள் நகராவிட்டால் இன்னோர் ஆள் ஓர் அங்குலம் கூட நகர முடியாது. வழி மறிப்பவள் போல ராணியை விட உயரமாயிருந்த பெண் குறுக்கே நின்றிருந்தாள். மூன்றடி உயரமான வரவேற்பு முகப்பு. அசல், நகல்களை ஒழுங்கு செய்யும் மேசையும் அது தான். மேசைக்குப் பின்னே ஆளுயர தடுப்பு இருந்தது அதன்பின்னால் நான்கு நகலெடுக்கும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

திருமால்பூர் எக்ஸ்பிரஸ்


திருமால்பூர் எக்ஸ்பிரஸ்   சத்யானந்தன்     மலர்விழி அந்த அலமாரியின் வெவ்வேறு தட்டுக்கள், இழுப்பறைகளைத் துழாவியது பத்துப் பதினைந்து பக்கமான தாட்களுக்காகத் தான். சென்ற வருடம் கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பெருங்களத்தூர் மூன்று ஊர்களில் தங்கள் வீட்டில் புடவைகளை வைத்து விற்க அனுமதித்த பெண்களின் பட்டியல் கைபேசி எண்கள் ஒரு ‘ஃபோல்டரில்’ போட்டு வைத்திருந்தாள். எதைத் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | 1 Comment

ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’


ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’ சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் என்னைப் பெரிதும் ஈர்ப்பவை. சமகால வாழ்க்கை திடீரென எங்கிருந்தோ வந்ததல்ல. இன்றைய பிரச்சனைக்கான மூலம் ஒரு தலைமுறை தள்ளிப் போட்ட அல்லது கண்ணை மூடிக் கொண்டு விட்ட ஒரு கேள்வி. எனவே தீர்வு சமகாலத்துடையது மட்டுமல்ல. நம் இயல்பில் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது. … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Leave a comment

காத்யாயனி


(ஜூன் 2016 இதழில் வெளியிட்ட குமுதம் ‘தீராநதி’ இதழுக்கு நன்றி) காத்யாயனி சத்யானந்தன் மூன்றடுக்கு சயன வசதியில் வழக்கம் போல் நான் மேற்தட்டுப் படுக்கையை முன்பதிவு செய்திருந்தேன். அக்டோபர் மாதமானாலும் பெட்டிக்குள் வெப்பம் கணிசமாயிருந்தது. பயணப் பெட்டிகளை இருக்கைக்குக் கீழே இடம் பார்த்து வைக்கும் பரபரப்பு – சந்தடி, வழியனுப்ப வந்தோரின் உரத்த கரிசனம், இளசுகளின் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

உமாமகேஸ்வரியின் சிறுகதை ‘குளவி’


உமாமகேஸ்வரியின் சிறுகதை ‘குளவி’ காலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சற்றே நீளம் குறைவான சிறுகதை உமாமகேஸ்வரியின் ‘குளவி’ ஒரு குளவியின் கூட்டை நாம் சேதப்படுத்தினால் அது பாவ காரியம் என்னும் நம்பிக்கையில் நாம் ஊறியவர்கள். அந்த நம்பிக்கையிலிருந்து விலகி இருப்பவர்கள் குறைவு விதிவிலக்காக. ஒரு குளவி தன் இருப்பிடத்தை எளிதில் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஈரக்களிமண் … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged | Leave a comment