Tag Archives: அமெரிக்கா

அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்


அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள் புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி


கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ


கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ நேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

சன்னிவேலில் இரு மாதங்கள்


சன்னிவேலில் இரு மாதங்கள் மகளின், மருமகனின் விருப்பப் படி திடீரென அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சன்னிவேலில் வந்து சேர்ந்தேன். இரு மாதங்கள் இருப்பேன். அதற்கு மேலும் நான் தங்க வாய்ப்புண்டு. ஆனால் எனக்குத் திரும்பவும் இந்தியா போகவே எண்ணம். இலக்கியக் கூட்டம் அல்லது வாசகர் சந்திப்பு சாத்தியமென்றால் எனக்கு sathyanandhan.mail@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். எனக்கு cal … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19


  கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19 சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு ‘டிராலி ‘ வேண்டுமென்றால் 5 டாலரை இயந்திரத்துக்குள் போட வேண்டும். கடன் அட்டை மூலமும் செய்யலாம். ஒரு டிராலி மட்டும் எடுக்க வாகாக பிரிந்து நிற்கும். எங்களுக்கு பத்து நிமிடமாகியும் ‘லிப்ட்’ கிடைக்கவில்லை. எனவே படி வழி சென்றோம். மருமகனுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 18


கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 18 சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்துக்குப் பின்பக்கம் தெரியும் மலைத் தொடர் சில நூறு கிமி தொலைவில்தான் இருக்கும். ஆனால் மலையின் உச்சியில் உறைபனி தெரிகிறது. இந்தியாவில் நாம் இமைய மலையில் மட்டுமே பனி மலையை வருடம் முழுவதும் காண முடியும். ஆனால் அமெரிக்காவில் இது பல நகரங்களுக்கு அண்மையானது … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 17


சன்னி வேல் பகுதியின் பல இடங்களிலும் ‘மக்னொலியா’ மரங்கள் பெரிய பெரிய வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒவ்வொரு பூவும் சூரிய காந்தி அளவு பெரியது. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகள் இரண்டுமே பசுமை மிகுந்தவை. நகரங்களில் கூட அரிதாகவே ஒரு கான்கிரீட் காடு என்னுமளவு நாம் குடியிருப்புக்களை நெருக்கமாகக் காண்கிறோம். மக்கள் தொகை குறைவு. … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 16


கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 16 இந்தக் காகிதப் பை எந்த அளவு எடையைத் தாங்கும் ? இது பெயரளவு நாம் பொருட்கள் வாங்கியதும் கடையில் தரும் காகிதப் பை . மேலும் கீழுமாக நாம் பொருட்கள் விழா வண்ணம் வண்டிக்கு எடுத்துக் போக வேண்டும்.  நாம் பிளாஸ்டிக் பை போலக் கேட்டாலும் அது மறுசுழற்சி … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 15


கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 15 அமெரிக்காவில் எரிசக்தியை உற்பத்தி செய்ய எல்லா வாய்ப்பும் உண்டு. வளமும் உண்டு. அணைக்கட்டுகளில் உற்பத்தியாகும் நீர் மின்சக்தி, அணு உலை, எரிபொருள் வழி மின்சாரம் என எதற்கும் இங்கே பஞ்சமில்லை. இருந்தாலும் காற்றாலை வைக்க ஏற்ற இடங்களில் பெரிய அளவில் நிறுவுகிறார். சாக்ரமென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ வரையான … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் -14


கலிபோர்னியா என் புகைப்படங்கள் -14 படத்தில் நாம் காண்பது வாகன நிறுத்தத்தில் நுழையும் போதே , ஒரு மின்னணுக் கருவியில் என் மகள் தமது தொலை பேசி எண்ணைப் பதிவு செய்கிறார். வெளியேறும் போது மறுபடி பதிவு செய்தால் போதும். ‘ஆன் லைனில் ‘ பைசா வசூல் ஆகி விடும். நம் மால்களில் இது விரைவில் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment