Tag Archives: ஆனந்த விகடன்

கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை


கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியப் பண்பாடு, மத நம்பிக்கை அடிப்படையிலான ஒழுக்க விதிகள் அனைத்துமே நம் அசல்தன்மையை, ஆழ்மனக் கிடைக்கையை நாம் உணர்ந்தரியத் தடையாகின்றன என்னும் கருத்தை முன் வைத்த சிந்தனையாளர் நீட்சே. “கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரைக் கொன்று விட்டோம்” என்னும் கருத்தை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

தடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை


தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

புதுக்கோட்டை டீக்கடையில் மரக்கன்று இலவசம்


புதுக்கோட்டையில் சிவகுமார் என்னும் டீக்கடைக்காரர் தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் தந்து மிகப் பெரிய பசுமைப்பணி செய்கிறார். அவருக்கு நம் பாராட்டுகள். விகடன் செய்திக்கான இணைப்பு —————————இது.    

Posted in பசுமை | Tagged , , , , | Leave a comment

1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி


1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை 1200 கிமீ மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து இளைஞர்கள் வழியெங்கும் 300 விதைப் பந்துகளை வீசியிருக்கிறார்கள். இவை மொத்தம் 1500 மரங்களை உருவாக்க இருப்பவை. இந்த இளைஞர்களின் பசுமைப் பணி பாராட்டுக்குரியது. … Continue reading

Posted in பசுமை, Uncategorized | Tagged , , , , , | Leave a comment

தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை


தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை ‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை


கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை வீட்டுக்குள் வந்து மரங்களை அரிக்கும் போது மிகவும் தொல்லையும் நட்டமும் தருவது கறையான். உண்மைதான். ஆனால் இயற்கைச் சூழலில் கறையான் கழிவான, உதிர்ந்த அல்லது பட்டுப் போன மரம் , செடி கொடிகளை உண்டு பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை எளிதாக்குபவை. மிகவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை!’ – சாரு நிவேதிதா


தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை! – சாரு நிவேதிதா இது பற்றிய விகடன் பதிவுக்கான இணைப்பு ————— இது. ஓரினச் சேர்க்கையைக் குற்றப் பட்டியலில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கி விட்டது. ஒரு தனி நபரின் சுதந்திரம் பற்றியதும், வித்தியாசமான ஒரு அந்தரங்கம் சமூகத்தின் கட்டுப்படுத்தலுக்குள் வர வேண்டிய அவசியமில்லை என்பதுமே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’


தடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’                      தடம் அக்டோபர் 2017 இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’  வெளியாகி இருக்கிறது.                    சிறுகதையின் உருவமும் உள்ளடக்கமும் புதுமைப்பித்தனால் நவீனத்துவத்தின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை


காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை தடம் பிப்ரவரி 2017 இதழில் மலையாள எழுத்தாளர் பால் ஜக்கரியாவின் சிறுகதை ‘தேன்’ பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாக ஒரு விஷயம் எப்படிச் சொல்லப் பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். மாய யதார்த்தமாய் சொல்லப் பட்டாலும் கதையின் சாராம்சம் மனதில் தைக்கும். மிகவும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் : பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment