Tag Archives: இனிய உதயம்

அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை


அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை ஜெயமோகன் கட்டுரைக்கு இணைப்பு ————->இது அப்துல் ரகுமானை நான் இனிய உதயம் வாயிலாக சமீப காலத்தில் தான் வாசித்து வருகிறேன். அக்டோபர் 2015 இதழில் உள்ள “முள்ளும் மலர்” கவிதையிலிருந்து ஒரு பகுதி: பக்தி ஒரு சலவை என்றால் இவர்கள் ஏன் அழுக்காகவே இருக்கிறார்கள் பக்தி ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு, விமர்சனம் | Tagged , , , , | 1 Comment

கிளியோபாட்ரா மையமாக பொற்றேகாட்டின் மலையாள சிறுகதை


கிளியோபாட்ரா மையமாக பொற்றேகாட்டின் மலையாள சிறுகதை அழகுக்காக மட்டுமா கிளியோபாட்ரா அறியப் பட்டாள்? அவளது குரூரத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் சேர்த்துத்தான். அவளைப் பற்றி அறிந்தவற்றால் கதைசொல்லி மிகவும் ஈர்க்கப்பட்டவன். அவன் அவளைப் போலவே ஒருத்தியை சந்திக்கிறான். ஆனால் அவள் குரூரமானவளில்லை. கருணை மிகுந்தவள். அவளது வாழ்க்கை வரலாற்றில் வரும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை கதை சொல்லி நினைவு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை


இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை பாறப்புரத்துவின் “சூறாவளிக் காற்றுக்கும் நெருப்பு குண்டுகளுக்கும் மத்தியில்” என்னும் சிறுகதையின் மொழி பெயர்ப்பு ‘இனிய உதயம்’ ஆகஸ்ட் 2015 இதழில் முதலில் ஒரு எளிய சரடுள்ள கதையாகவே தோன்றியது. பிரிட்டிஷ் ராணுவத்துடன் செல்லும் இந்திய (பிரிட்டிஷ்) பகுதி சிப்பாய்கள்களில் ஒருவன் எகிப்தியப் பெண் ஒருத்தியைக் … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்”


ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்” தூரிகை சிந்திய வியர்வை துளித்துளி வண்ணங்களாய் சட்டை முழுவதும் சிதறிக் கிடக்க கட்டிடக் காட்டில் சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் கூலித் தொழிலாளி இனிய உதயம் ஜுலை 2015 இதழில் வெளிவந்துள்ள சின்னஞ்சிறிய கவிதை இது. இந்தக் கவிதையில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருந்தன. ஒன்று ஒரு தொழிலாளியைப் பட்டாம்பூச்சியாகக் காட்டும் உருவகம். … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்”


எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “அவர்கள் பாடுகிறார்கள்” பின்நவீனத்துவக் கதை என்பது என்ன? அது நவீனத்துவத்தின், யதார்த்தத்தின் வரம்புகளுக்குள் அடங்காத ஒரு கதையை அல்லது ஒரு சித்தரிப்பை நம் முன் வைப்பது. கனவு கலையும் போது கனவின் அனுபவம் நனவில் கிடைக்கும் அனுபவ உணர்தலுக்குக் குறைவானதல்ல என நாம் உணர்கிறோம். அந்த ஒரு கணத்தில் நமக்கு கனவு, … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , , | 1 Comment

பருவ மழைக்காலம் – டி.பத்மநாபனின் பரவசமான சிறுகதை


பருவ மழைக்காலம் – டி.பத்மநாபனின் பரவசமான சிறுகதை இனிய உதயம் நவம்பர் 2014 இதழில் நான் வாசித்த இரண்டாவது மொழிபெயர்ப்புச் சிறுகதை “பருவ மழைக்காலம்”. இணையத்தில் பார்க்கும் போது டி.ப. கேரளத்தின் மூத்த எழுத்தாளர். பல விருதுகளைப் பெற்றவர். மிகவும் எளிய சின்னஞ்சிறிய கதை. ஒரு இளம் பெண் எழுத்தாளர் தன்னை ஊக்குவித்த மூத்த ஆண் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1


இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1 நக்கீரன் பதிப்பகத்தின் இனிய உதயம் இதழின் மார்ச் 2013 இதழில் சமகால இலக்கியமும் அதற்கு முன் வந்த இலக்கியங்கள் பற்றிய பதிவுகளும் இணையான முக்கியத்துவம் பெற்றுள்ளன. சமகாலப் பதிவுகளில் கவிதைகள் முன்னுரிமை பெற்றுள்ளன. முதலில் சமகாலக் கவிதைகள் பற்றிய பதிவுகளைக் காண்போம். … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment