Tag Archives: தமிழ்க்கவிதை

முன்னகர்வுகள்


  நீ தந்த செலாவணிகள் சத்யானந்தன் முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே   அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில்   உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய்   இலக்காய்த் தென்படும் புள்ளிகள் வேகம் திசை யாவும் வசப்படுத்தும் வித்தை ரகசியமில்லை   மௌனம் மனம் திறப்பு சொல்லாடல் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment

தன்னிகரில்லாக் கிருமி


தன்னிகரில்லாக் கிருமி சத்யானந்தன் யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன் “கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்” “இறைவா எப்படி இந்த அற்புதம்?” வியந்தார் ஒளி. “அவசரப்படாதீர் அற்புதம் இனிமேல் தான் நிகழும்…” “புரியவில்லை” “கிருமிகளுக்கு மனிதரை விடவும் வலிய மனசாட்சியை அருளி இருக்கிறேன்” “நன்றி இறைவா…. இனி … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | 1 Comment

நிழல்களின் நீட்சி


நிழல்களின் நீட்சி சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? பதிலளித்தது கங்காருவின் நிழல் பகலில் நாளுக்கொரு வடிவம் ஒரு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

முக்கோணம்


முக்கோணம் சத்யானந்தன் சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக சகபயணி எதிர்ப்பயணி யாவரும் ஒரு அமைப்பின் பன்முகங்கள் உன் உரிமை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | Leave a comment

மாஞ்சா


மாஞ்சா சத்யானந்தன் காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும் பட்டம் விடுவதில் வீரமும் போட்டியும் துண்டித்தலும் தனித்து மேற்செல்லுதலும் மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை நீங்களோ என் காத்தாடியின் வெற்றி பற்றி நான் பேசத் துவங்கினாலே மாஞ்சா செய்த​ காயங்கள் பற்றி புலம்பத் துவங்குகிறீர்கள் வீரத் துக்கும் காற்றாடிக்கும் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment