Tag Archives: தீராநதி

விமலாதித்த மாமல்லன் சிறுகதை – கோபுரம்


விமலாதித்த மாமல்லன் சிறுகதை – கோபுரம் இன்றைய தேதியில் புனை கதை எழுதுகிறவர் புதிதாக ஒரு சூழல் அல்லது களம் தேடினால் கிடைக்குமா? இதுவரை எழுதாத விஷயத்தைப் பற்றிப் புனைகதை எழுதுகிறேன் என்று முடிவு செய்து கொண்டால் அனேகமாகச் சிறுகதை எழுதும் எந்த எழுத்தாளருக்கும் வருடம் ஒரு கதை அமைந்தால் அதிகம் என்றே ஆகி விடும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

தேவதேவனின் இரண்டு கவிதைகள்


தேவதேவனின் இரண்டு கவிதைகள் தீராநதி ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்துள்ள தேவதேவனின் இரண்டு கவிதைகளுமே நம் அற உணர்வைச் சுண்டுபவை. முதல் கவிதை “ஒற்றைக்கை மனிதன்” கவிதையில் மிகவும் சவாலான ஒரு கற்பனையைக் கவிதையாக்குகிறார் தேவதேவன். சற்று பிசகினாலும் மாற்றுத் திறனாளியைப் பகடி செய்தது போல முடிந்து விடும். நவீனக் கவிதைகளின் சிறப்பு சொற்சிக்கனமும் சரியான … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

தீராநதியில் நடிகர் சார்லியின் பேட்டி


தீராநதியில் நடிகர் சார்லியின் பேட்டி நடிகர் சார்லி தெரு நாடகம் மற்றும் மேடை நாடகத்திலிருந்து தான் சினிமா வந்தார் என்பது (எனக்கு) செய்தியே. அவர் திரும்பவும் நாடகங்களில் நடிக்கிறார். அவருடன் தீராநதி உரையாடலில் நாடகக் கலை பற்றிய அவரது பார்வையில் சில சுருக்கமான கருத்துக்கள் மட்டும் கிடைக்கின்றன. ஆனால் ஹைதராபாத்தில் நடந்த ஒரு முக்கிய நாடக … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

அய்யப்ப மாதவனின் வசன கவிதை


அய்யப்ப மாதவனின் வசன கவிதை வசனகவிதையில் நம்மை ஈர்ப்பது அது தரும் அழகிய வாசிப்பு அனுபவம். காதலி மனைவியாகிப் பின் கடுமையான கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறாள். அவளைப் பிரிந்த காலத்தில் அவளுக்குக் கணவன் எழுதும் ஒரு கவித்துவமான கடிதம் அய்யப்ப மாதவனின் “யாமினிக்கு கடிதங்கள்” என்னும் வசனகவிதை. இது தீராநதி பிப்ரவரி 2015 இதழில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

க.அம்சப்ரியாவின் கவிதை


க.அம்சப்ரியாவின் கவிதை தீராநதி டிசம்பர் 2014 இதழில் வந்துள்ள க.அம்சப்ரியாவின் ‘சொந்த மிருகங்கள்” என்னும் கவிதை எளிமையானது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு எச்சரிக்கையை ஒரு பெண் கவிஞர் தருகிறார். பாலியல் வன்முறையிலிருந்து காத்துக்கொள் என்று தரும் கவிதை இது. “பசியை வென்ற வரமொன்றை வைத்திருப்பதாக ஊரெல்லாம் பிதற்றித் திரிந்த” மிருகம் அது. பாலியல் வன்முறையில் வெளியிலிருந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

முற்பகல் ஆயுத விற்பனை செய்யின்?


முற்பகல் ஆயுத விற்பனை செய்யின்? பிற்பகல் ஐஎஸ் ஐஎஸ் வரும் என்று தமது கட்டுரையில் பதிவு செய்கிறார் எச்.முஜீப் ரஹ்மான் தீராநதி நவம்பர் 2014 இதழில். ஈராக்கில் சதாம் ஹூஸைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக பல குழுக்களுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆயுதங்களை விற்பனை செய்தன. சிரியாவில் 2011ல் பஷார் அசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

ரே பிரேட்பரியின் சிறுகதை


ரே பிரேட்பரியின் சிறுகதை “மரநாற்காலிக் கால்” என்னும் அமெரிக்க எழுத்தாளர் ரே பிரேட்பரியின் சிறுகதை எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியால் மொழிபெயர்க்கப் பட்டு ஜூன் 2014 தீராநதி இதழில் வெளி வந்திருக்கிறது. அறிவியல் புனைகதை என்னும் வகையில் இது சேரும். அறிவியல் அதிகற்பனை (Science Fantasy) என்றும் கொள்ளலாம். அசல் கதையின் தலைப்பு A Piece of Wood. ராணுவவீரன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment