Tag Archives: human values

பாரதியே ஆனாலும் மிகை மிகையே


பாரதியே ஆனாலும் மிகை மிகையே “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” பாரதி காலம் தொட்டு இந்த தன்னை உயர்த்திக் காட்டி ஒரு பீடத்தில் இருந்து எழுதுவதும் பேசுவதும் பல இலக்கியவாதிகளிடம் உண்டு. “சுடர் மிகும் அறிவு” உடையவர் எவ்வளவோ பேர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | 2 Comments

நல்ல காலம் பொறக்குதா?


நல்ல காலம் பொறக்குதா? அண்ணா சாலை (மவுண்ட் ரோட்) சென்னையில் இந்த காட்சியை அண்ணா சிலை அருகே பார்த்த போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பாதாள சாக்கடை அடைப்பை இயந்திரத்தின் மூலம் அகற்றிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய இயந்திரம் பாதாள சாக்கடை இருக்கும் ஊர்கள் எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சென்னையில் பல … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம்


அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம் அமெரிக்கா பல உலக நாட்டுத் தலைவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்பது ஊர்ஜிதம் ஆகி விட்டது. 35 உலகத் தலைவர்களின் 200 தொலை பேசிகள் உளவு பார்க்கப் பட்டிருக்கின்றன. இவர்களில் பல ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளே. இது குறித்து அமெரிக்காவுக்கு எந்த வருத்தமுமில்லை. வெட்கமுமில்லை. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | 3 Comments

புத்தரின் கூற்றாக நான் எழுதியது உண்மையானது


புத்தரின் கூற்றாக நான் எழுதியது உண்மையானது போதி மரம் நாவல் அத்தியாயம் 28ல் புத்தருக்கும் ஒரு இளைஞனுக்கும் நடக்கும் வாதமாக நான் இப்படி எழுதியிருந்தேன்: (அதன் ஒரு பகுதி இது) “உன் செல்வம் கொள்ளை போகிறது. உன் உறவினர் அனைவரும் தம் செல்வங்களைக் பங்கு வைத்து உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்களா? பதில் பேசு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்?


நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்? அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு செல்வந்த தனியார் பள்ளி மாணவர்  இந்த ஆண்டு தங்கள் பட்டம் பெறும் நாளில் யார் பேச வேண்டும் என்று தேர்வு செய்த போது, அவர்கள் Nipun மேத்தாவைத் தேர்ந்தெடுத்தார்கள். இது Nipun மேத்தாவின் பேச்சின் சுருக்கம்: படிப்பு முடிந்து நீங்கள் காலடி எடுத்து வைக்கும் உலகம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

திருட்டுக்கு இந்தோனேசிய நீதிபதியின் தீர்ப்பு


திருட்டுக்கு இந்தோனேசிய நீதிபதியின் தீர்ப்பு மர்ஜுகி என்னும் இந்தோனேசிய நீதிபதி முன் ஒரு மூதாட்டி தான் ஒரு தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு திருடியதாக ஒப்புக் கொண்டு குற்றவாளியாக நின்றார். 100 அமெரிக்க டாலர்களுக்கு இணையான ரூபியாக்களை அவர் அபராதமாகக் கட்ட வேண்டும் சட்டப்படி என்று நீதிபதி கூறினார். அதைக் கட்ட முடியாவிட்டால் இரண்டரை ஆண்டுகள் சிறை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு


திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் அடிப்படையில் ஒரு திருநங்கை காவலாகப் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். தேசிய ஊரக சுகாதார திட்டம் என்னும் நலப்பணிக்குக் கீழே தொகுப்பூதியமாக மாதம் 4000 ரூபாய் அவருக்கு ஊதியமாக வழங்கப் படும். இவர் ஆங்கிலத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

காவல் துறையின் மனித நேயம் புகைப்படத்தில்


முகநூல் நண்பர்கள் “துபாய் தமிழர் சங்கமத்துக்கு” படத்தைப் பகிர்ந்ததற்காக நன்றி (image courtesy:http://www.facebook.com/cvjayanthy) காவல் துறையின் மனித நேயம் புகைப்படத்தில் முக நூல் வழியாக காவல் துறை பற்றிய நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்ட திருமதி. ஜயந்தி அவர்களுக்கு நன்றி. விசாரணையில்லாமல் கண்டதும் சுடும் போலீஸுக்குக் கைதட்டும் படி திரைப்படங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நாம் பாராட்ட வேண்டியது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இனமில்லை அன்புக்கு – – மனதைத் தொடும் புகைப்படங்கள்


இனமில்லை அன்புக்கு — மனதைத் தொடும் புகைப்படங்கள் கலிபோர்னியாவில் ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரு புலி மூன்று குட்டிகளை ஈன்றது. குறைப்பிரசவத்தில் மிகவும் சிறிய வடிவில் பிறந்த மூன்று குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பிரசவவலியில் இருந்து மீண்டபின் புலியின் உடல்நிலை மோசமாகி பலவீனமாகிக் கொண்டே வந்தது. நோய் எதுவும் தொற்றி இருக்கவில்லை. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 2 Comments

மே தினத்தன்று நாம் வாழ்த்தும் எம் எல் ஏ


தமிழக எம் எல் ஏவின் மனித நேயம் முகையூர் என்னும் ஊரின் அருகே அவர் கண்ணெதிரில் அல்லாமல் சாலையின் மறு பக்கம் கும்பலாக மக்கள் நின்றிருக்க என்ன என்று விசாரித்தார் இந்த எம் எல் ஏ. விபத்தில் அடிபட்டு படுகாயமான ஒரு இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment