Tag Archives: iniya udhayam

விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை


விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை ஊர் உறவு ஆகியோரால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிருந்தாவன விதவைகள். பலவேறு வயதில் இவர்கள் தண்ணீர் பந்தல் போல வழிப்போக்கர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவர்கள் தரும் பணத்தை வைத்து மற்றும் பஜனைப் பாடல்களைக் கோவில்களில் பாடி பிரசாதம் வாங்கி உண்டு இப்படித் தான் உயிர் வாழ்கிறார்கள். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | 2 Comments

குபரா மற்றும் கென்ய பழங்குடிக் கதை – இரு சிறுகதைகள்


குபரா மற்றும் கென்ய பழங்குடிக் கதை – இரு சிறுகதைகள் இனிய உதயம் ஜூன் 2013 இதழ் இரண்டு அபூர்வமான சிறுகதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. ஒன்று குபராவின் சிறுகதை. மற்றொன்று கென்ய நாட்டின் பெண் எழுத்தாளரான ‘க்ரேஸ் ஏ.ஒகாட்’ டின் சிறுகதை. கென்ய சிறுகதை ‘மழை வந்தது’ நமக்கு கண்டிப்பாக அவதார் படத்தை நினைவு படுத்தும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

எம்.டி.வாசுதேவன் நாயர் – வைக்கம் முகம்மது பஷீர் – சிறுகதைகள்


எம்.டி.வாசுதேவன் நாயர் – வைக்கம் முகம்மது பஷீர் – சிறுகதைகள் எம்.டி.வாசுதேவன் நாயர், வைக்கம் முகம்மது பஷீர் இருவருமே மலையாளத்தில் மட்டுமல்ல இந்திய இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகள். இவர்களின் சிறுகதைகளை மொழி பெயர்ப்பாக இனிய உதயம் – மே 2013 இதழில் வாசிக்கிறோம். எம்.டி. வாசுதேவன் நாயர் ஒரு மிகவும் சிக்கலான விஷயத்தை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

ஏப்ரல் 2013- இனிய உதயம் -3- நேர்காணல், மலரும் நினைவுகள், கட்டுரைகள்


ஏப்ரல் 2013- இனிய உதயம் -3- நேர்காணல், மலரும் நினைவுகள், கட்டுரைகள் நேர்காணலில் ம.லெ.தங்கப்பா. சங்க நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தற்காக இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர். பேட்டியில் அவர் மொழிபெயர்ப்பைப் பிற பணிகளுடன் சேர்த்தே செய்வதாகக் குறிப்பிட்டிருப்பது அவரது திறனைக் காட்டுகிறது. படைப்பிலக்கியம் உருவாகும் வரை சிரமம். உருவாகி விட்டால் ஒரு வேகத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஏப்ரல் 2013 -இனிய உதயம்- 2- முத்தான மொழிபெயர்ப்புக் கதைகள்


ஏப்ரல் 2013 -இனிய உதயம்- 2- முத்தான மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுகதைகள் நமக்கு ஒரு பெரிய சமூகப் பின்புலத்தின் கட்டாயங்களை ஆழ்ந்து நோக்க, ஒரு கால கட்டத்தின் ஒரு தரப்பு நிகழ்வுகளைச் சொல்லி மீதியை நாம் யூகிக்கச் செய்கின்றன. அதனாலேயே சிறுகதை என்னும் வடிவம் புனைவுகளில் ஆகச் சிறந்த ஒன்றாகக் கருதப் படும். இனிய உதயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஏப்ரல் 2013- இனிய உதயம் -1- கவிதைகளில் மனம் தொட்டவை


ஏப்ரல் 2013- இனிய உதயம் -1- கவிதைகளில் மனம் தொட்டவை கவிதைகளுக்கே நிறைய இடம் தருவது “இனிய உதயம்” இதழின் தனித்தன்மை. ஏப்ரல் 2013ல் வந்த கவிதைகளில் மனந்தொட்ட துளிகள்: அழகை ஆராதிப்போம் – இங்குலாப் தனக்குள் இருக்கும் கஸ்தூரியைத் தேடி அலையும் மான் நான் எனக்குள் சமுத்திரத்தின் மாதிரி இருக்கிறது சமுத்திரமே இல்லை கவிதை- … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-2


இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-2 கவிதைகள் தவிர புனைவிலக்கியம், கட்டுரைகளை நாம் வாசிக்கும் போது முதலாவதாக நாம் வாசிக்கத் துவங்குவது ‘அவன் வரவில்லை’ என்னும் தலைப்பின் தகழி சிவசங்கரம்பிள்ளையின் மலையாள குறுநாவலின் மொழிபெயர்ப்பே. சுரா இதை மொழி பெயர்த்துள்ளார். இந்த நாவலின் மையக் கதாபாத்திரம் கொச்சு கல்யாணி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

நக்கீரனின் இனிய உதயம் இலக்கிய இதழ் – செறிவு


நக்கீரனின் இனிய உதயம் இலக்கிய இதழ் – செறிவு ஒர் இலக்கிய இதழை நடத்துவது பெரிய சவால். உண்மையான ஈடுபாடும், கடுமையான உழைபப்பும் மற்றும் நல்ல படைப்புக்களின் வரவும் ஒருங்கே அமைய வேண்டும். தமிழில் சிறு பத்திரிக்கைகள் பல இவை யாவும் அமையப் பெற்றவையே. பெரிய நிறுவனங்களால் நடத்தப் படும் இதழ்களில், தீராநதி, இனிய உதயம், … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment