Tag Archives: kalachuvadu

யானை பற்றி ஒரு கவிதை


யானை பற்றி ஒரு கவிதை காலச்சுவடு ஏப்ரல் 2014 இதழில் ஒரு நல்ல கவிதையைக் காண்கிறோம். சுகுமாரனின் “களிறு எறிந்து பெயர்தல்” என்னும் கவிதையே அது. யானை எங்கே தென்பட்டாலும் நம் கவனத்தைக் கண்டிப்பாகக் கவர்கிறது. ஒரு அதிசய உணர்வுடனேயே எத்தனை முறை பார்த்தாலும் எந்த வயதில் பார்த்தாலும் நாம் யானையைப் பார்க்கிறோம். ஆனால் நாம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 27


திண்ணையின் இலக்கியத் தடம் – 27 சத்யானந்தன் ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

வாஸந்தியின் கதை ஏன் என் மனைவியை வருத்தப் படுத்தியது?


வாஸந்தியின் கதை ஏன் என் மனைவியை வருத்தப் படுத்தியது? “வாஸந்தி ஏன் இறுதியில் அந்தப் பெண்ணை சாக அடித்துவிட்டார்?” நான் பதில் பேசவில்லை. “இறுதியில் அவள் கணவனே அவளைக் கொன்று விடுகிறான். அவன் கெட்டதனத்தை எடுத்துக்காட்ட அவ்வாறு கதையை முடித்தாரோ?” காலச்சுவடு மார்ச் 2014 இதழில் வாஸந்தியின் ‘வேலி” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. காப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

யாரும் தடுக்காமல் ஒரு கொலை


யாரும் தடுக்காமல் ஒரு கொலை தனியாரோ அல்லது அரசோ ஒரு மரத்தை வெட்டினால் அதை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. அது ஒரு பட்டப் பகல் கொலை என்பதை யாருமே உணர்வதில்லை. ஒரு மரம் என்பது உயிருள்ளது. உயிர்ப்புள்ளது. மக்களுக்கு ஜீவநாடியான ஆக்ஸிஜனைத் தரக் கூடியது. எத்தனையோ பறவைகளுக்கு உறைவிடமாவது. மழையை வரவழைப்பது. நில அரிப்பைத் தடுப்பது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

அனிதா தம்பியின் மலையாளக் கவிதை


அனிதா தம்பியின் மலையாளக் கவிதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் அனிதா தம்பியின் மூன்று கவிதைகள் காலச்சுவடு பிப்ரவரி 2014 இதழில் வந்துள்ளன. “காய்த்தபடியே” என்னும் கவிதை பலா மரத்தை ஒரு படிமமாகவும் உருவகமாகவும் கொண்டு எழுதப்பட்டு அழுத்தமாக அமைந்துள்ளது. நமக்கெல்லாம் ஒரு பலா மரத்தைக் கண்டால் என்ன தோன்றும்? எப்படி பலாப் பழங்கள் விழாமல் மரத்தோடு தொங்கிக் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

புலம் பெயரும் இலங்கைத் தமிழ்ப் பெண் – அ. முத்துலிங்கத்தின் சிறுகதையில்


  புலம் பெயரும் இலங்கைத் தமிழ்ப் பெண் – அ. முத்துலிங்கத்தின் சிறுகதையில் லூக்கா 22:34 என்னும் தலைபில் காலச்சுவடு செப்டம்பர் 2013 இதழில் அ. முத்துலிங்கத்தின் சிறுகதையின் மையக் கதாப்பாத்திரம் மார்செலா. இலங்கைத் தமிழர் மையமாகும் கதைகளை நாம் வாசிக்கும் போதெல்லாம் நாம் அவர்கள் பற்றி எவ்வளவு குறைவாகவும் தவறாகவும் புரிந்து வைத்திருக்கிறோம் என்பது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

கல்வி தமிழிலா?ஆங்கிலத்திலா? காலச்சுவடு ஜூலை 2013 விவாதம்


கல்வி தமிழிலா?ஆங்கிலத்திலா? காலச்சுவடு ஜூலை 2013 விவாதம் மிகவும் பழைய தலைப்பு இது . தமிழா? ஆங்கிலமா? இதற்கான விடைகள் பல முறை விவாதிக்கப் பட்டவை. தெள்ளத் தெளிவானவை. பின்னணி இது தான் அரசுப் பள்ளிகளில் சில ஆங்கில வழிக் கல்வி அளித்தது போக மாணவர் விரும்பினால் எந்தப் பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்வி கற்கலாம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

காலச்சுவடு – உயிர்மை – இலங்கை


காலச்சுவடு – உயிர்மை – இலங்கை பரபரப்புக்கு சினிமா அரசியல் போன்ற மற்றொன்று தான் பல ஊடகங்களுக்கு. ஆனால் அதிக லாபம் இல்லாத (சில சமயம் நட்டமே) நிலையிலும் தொடர்ந்து இயங்கும் இலக்கிய இதழ்கள் கண்டிப்பாக சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றன. இலங்கைத் தமிழர் பற்றிய பல கட்டுரைகளை நாம் மே 2013ல் இரண்டு இதழ்களிலுமே காண்கிறோம். … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

காலச்சுவடு – ஏப்ரல் 2013 வாசிப்பு 3- புனைவுகள், பரதேசி பட விமர்சனம்


காலச்சுவடு – ஏப்ரல் 2013 வாசிப்பு 3- புனைவுகள், பரதேசி பட விமர்சனம் புனைவுகளில் ஒரு சிறு கதை மற்றும் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை என இரண்டு. “ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டு” என்னும் சிறுகதை குலசேகரனின் படைப்பு. பாம்புச் சட்டை இதில் ஒரு படிமமாகப் பயன் பட்டிருக்கிறது. ஒரு விடலைச் சிறுவன் பாம்பு சட்டை உரிப்பதையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

காலச்சுவடு ஏப்ரல் 2013- வாசிப்பு -1 காந்திஜி, ஜின்னா சாவேஸ்


காலச்சுவடு ஏப்ரல் 2013- வாசிப்பு -1 காந்திஜி, ஜின்னா சாவேஸ் Roderick Matthews என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளரின் Jinnah vs Gandhi என்னும் நூலின் முடிவுரையின் தமிழாக்கம் “இரு தேசப் பிதாக்கள்” என்னும் கட்டுரை. அந்தத் தலைவர்கள் பற்றிய ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளரின் பார்வையை நமக்குத் தருகிறது. அவர் கருத்துக்கள் 1. ஜின்னா இல்லாமல் பாகிஸ்தான் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment