Tag Archives: modern tamil literature

போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10 சத்யானந்தன் போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10 சத்யானந்தன் யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். “வா..யசோதரா.. நீயும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8 சத்யானந்தன் “நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

உயிர்மை பிப்ரவரி 2013- எஸ். ராமகிருஷ்ணனின் நுட்பமான சிறுகதை


உயிர்மை பிப்ரவரி 2013- எஸ். ராமகிருஷ்ணனின் நுட்பமான சிறுகதை தமிழ் நாட்டில் எழுத்தாளர்களை எந்த காலகட்டத்தில் எடுத்து ஆய்வு செய்தாலும் இரண்டு விதமாகப் பிரிக்க முடியும். ஒருவர் எமக்குத் தொழில் எழுத்து என்று போராடியவர். இவர்கள் சிறுபான்மையினரே. பெரும்பான்மை வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு இரண்டு குதிரை சவாரியாக எழுத்தையும் சேர்த்து இழுபடுபவர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

நக்கீரனின் இனிய உதயம் இலக்கிய இதழ் – செறிவு


நக்கீரனின் இனிய உதயம் இலக்கிய இதழ் – செறிவு ஒர் இலக்கிய இதழை நடத்துவது பெரிய சவால். உண்மையான ஈடுபாடும், கடுமையான உழைபப்பும் மற்றும் நல்ல படைப்புக்களின் வரவும் ஒருங்கே அமைய வேண்டும். தமிழில் சிறு பத்திரிக்கைகள் பல இவை யாவும் அமையப் பெற்றவையே. பெரிய நிறுவனங்களால் நடத்தப் படும் இதழ்களில், தீராநதி, இனிய உதயம், … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 & 7


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5


http://puthu.thinnai.com/?p=17974 போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5 சத்யானந்தன் யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3


http://puthu.thinnai.com/?p=17669 சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3 சத்யானந்தன் இளவரசர் சித்தார்த்தனின் அரண்மனை வளாகத்தின் விருந்தினர் மாளிகைகள் கலகலப்பாக இருந்தன. யயோசதராவின் தாய் தந்தையரான கோலிய நாட்டு மகாராஜா சுப்பபுத்தாவும், மகாராணி பமீதாவும் நூற்றுக்கும் மேற்பட்ட அவர்களது உறவு மற்றும் பணியாளர்களால் மாளிகை களை கட்டி இருந்தது. மகாராணி பஜாபதி … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | 2 Comments

சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2


  http://puthu.thinnai.com/?p=17484 சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2 சத்யானந்தன் மழைக்கால அரண்மனை மதிலுள் நுழைந்த தீப்பந்த வரிசை இடது புறம் நீண்ட தூரம் சென்று வலது புறமாகத் திரும்பியது. தீப்பந்தங்கள் மீது ஈசல்கள் மோதி விழுந்தன. மேலே உதிரும் ஈசல் சிறகுகளைப் பொருட் படுத்தாமல் பின் வரும் ரதத்தின் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , | Leave a comment

சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா


http://puthu.thinnai.com/?p=17248 சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா சத்யானந்தன் அத்தியாயம் 1 கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment