Tag Archives: modern tamil poetry

ஒட்டுண்ணிகள்


ஒட்டுண்ணிகள் சத்யானந்தன்  உன் உண்மை எது உண்மை என்னும் கேள்வி இரண்டும் பலிபீடம் ஏற என் உண்மை நிறுவப் படும் அலைதல் திரிதலே தேடல் பிடிபட்டதே புரிதல் என்னும் விளக்கங்கள் இடம்பிடிக்கும் அகராதிகளில் என் உண்மையின் அரசியலில் தனிமையின் உயிர்ப்பு தனித்துவத்தின் ஆற்றல் நீர்த்துப் போகும் கரவொலிகள் ஒட்டுண்ணிகளாய் (imagecourtesy:wiki)

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | Leave a comment

நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை


நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை சமீபத்திய பேட்டி ஒன்றில் நவீனக் கவிதை காவியங்களுடன் ஒப்பிட இரண்டாமிடமே பெறும் என்னும் ஜெயமோகனின் பதிவைக் கீழே காண்போம்: 18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

பரிணாமம் – கவிதை


கவிதை பரிணாமம் சத்யானந்தன் ஆணாயிருக்கும் போது மேகத்திலேறி அமர்ந்து உஷ்ணத் தேடலில் தண்ணீர் பெண்பால் தண்ணீர் சுவாசம் தேடும் மீன்களின் முகவரி எப்போதும் நிகழாய் காலம் செங்கற் சூளையின் புகை மூட்டம் மண்ணின் தற்காலிகப் பரிணாமச் செய்தி

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

விழிப்பு – கவிதை


கவிதை விழிப்பு சத்யானந்தன் ஊரோடு விழித்து சலசலத்து உறங்கி கோலம் உடுத்தி குடும்பப் பாங்காய் தெருக்கள் நெடுஞ்சாலைகள் போலன்றி புரண்டு படுக்காமல் பூமி நனையும் வரை விழித்திருக்கும் விதை விழிப்பு சாவியாய்ப் பொருந்தும் பூட்டுக்கள் அனேகம் வாய் பிளந்திருக்க விவாதங்கள் வெளிச்சம் தொட்டும் விஷயங்கள் இருளிலும்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

மௌனம் சம்மதமா ? – கவிதை


கவிதை மௌனம் சம்மதமா ? சத்யானந்தன் சிந்தும் வியர்வைக்குக் கருவிகல் கவுரவம் சேர்த்தா? வேலை வாங்கும் வித்தைகள் பெருக வழி வகுத்ததா? கைவினைக் கலையை இயற்கை உணவைக் காவு வாங்கிய இயந்திரங்களின் பொம்மலாட்டத்தில் ஆறறிவாளி பொம்மையானது முடிவா? தொடக்கமா? கடிகார வடிவில் முதலில் நுழைந்த மின்னணு அடுப்பு வரை வளர்ந்து வீட்டை ஆக்கிரமிக்கும் சாதனங்களாய் வளர்ச்சி … Continue reading

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

பிடிப்பு – கவிதை


கவிதை பிடிப்பு சத்யானந்தன் உங்கள் வரவேற்பறைக்கும் எங்களதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை சாதனங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரம் நித்தம் அரங்கேறும் மேடையே என் வீடும் பொருளே பொருட்டானதின் பொருள் பிடிபடாதோரே என் உறவும் சுற்றமும் பிணைப்புகள் புகார்கள் அளவில் தன்மையில் வீட்டாருக்கும் பெயர் மட்டுமே வேறு என்றாலும் உங்கள் செருப்பு என் காலில் கடிக்கத்தான் செய்கிறது

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

கட்டுண்டு


கவிதை கட்டுண்டு சத்யானந்தன் அடுத்தவன் குருதி கொட்டும் அவஸ்தையில் அவனுக்கு ஆபாச ரசனை உண்டு இயன்றவரை எதிர்ப்படாது ஒளிந்து வந்தேன் ஒரு இரங்கற் கூட்ட முடிவில் எக்கச்சக்கமாய் மாட்ட கேட்டான் ‘என்னப்பா புதுசா என்ன கயிறு திரிக்கிறே?’ கயிறு கட்டுண்டு கிடப்பெதெல்லாம் பிறிதொன்றைக் கட்டிப் போடத்தான்  

Posted in கவிதை | Tagged , , , , | Leave a comment

போக்குவரத்து ஒழுங்கு


கவிதை போக்குவரத்து ஒழுங்கு சத்யானந்தன் ‘இந்த முறை உங்களுடன் பேசியே தீருவேன்’ கதவை வன்மையாகத் திறந்து போக்குவரத்து அதிகாரி முன் உட்கார்ந்தது கனவு ‘கனவுகளுக்கு போக்குவரத்து அனுமதி இல்லை’ ‘ஏன்?’ ‘வடிவம் வேகம் நிறம் இயந்திரம் எதுவும் மாறும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியாது’ ‘ஒழுங்கு செய்வது நகல்களுக்கு மட்டுமே பொருந்தும் ஐயா’ ‘இப்போது நெருக்காதே … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment

மலை வாசம்


கவிதை மலை வாசம் சத்யானந்தன் வஞ்சனை ஏதுமில்லை விரித்த உள்ளங்கையில் வைத்து நீட்டியிருக்க மாட்டேனா பாதரசத்தை குழைத்து மீட்கும் தெருவோர மூலிகை விற்பனையாளன் போல் கட்புலனானது பளிங்குத் தரை மீது தடுமாறும் பாம்பு போல் மறைந்தும் போனது ஆலங்கட்டி மழையில் கை சிலிர்க்க அள்ளியவை போல் வசீகரப் பூக்கள் சந்தனம் வெண்கல நாவசை மணி மலையின் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , | Leave a comment