Tag Archives: naaladiyaar

பாறையில் ஊற்றுப் போன்றோர் யார்?- நாலடியார் நயம்


பாறையில் ஊற்றுப் போன்றோர் யார்?- நாலடியார் நயம் எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவார் அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும் எற்றொன்றும் இல்லா- எதுவுமே இல்லாத அற்றுத்தற் சேர்ந்தார் -வழியற்றுப் போய் தன்னைச் சேர்ந்தவர் அசைவிடம்- பாறாங்கல்லால் ஆன இடம் அற்றக் கடைத்தும் – வற்றிப் போன … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

பிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா? – நாலடியார் நயம்


பிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா? – நாலடியார் நயம் யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை உடையவர்? – சாரல் கனமணி நின்றிமைக்கு’ நாட,  கேண் ! மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு தேரும் துணைமை – அறியும் ஆற்றல் சாரல் – மலைச்சாரல் கனமணி- பெரிய மணி (அணியும் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

தேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா? – நாலடியார் நயம்


தேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா? – நாலடியார் நயம் மெய்ம்மை – தன்மை (தோற்றத்தைத் தாண்டி மெய்யான தன்மை, அசல் முகம்) தக்காரும் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை எக்காலும் குன்ற லிவராவர் – அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு தக்காரும் – (குணத்தால்) உயர்ந்தோரும் தக்கவரல்லாரும்- (குணத்தால்) தாழ்ந்தோரும் எக்காலும் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

விதி வலியதா? – நாலடியார் நயம்


பழ வினை (வினைப்பயன்) – நாலடியார் நயம் உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பால் அனையவும் அன்னவாம்; மாரி வறப்பிற் றருவாரும் இல்லை; அதனைச் சிறப்பிற் றணிப்பாரும் இல் உறற்பால- (பிறப்போடு வந்து) உடனிருக்கும் வினைப்பயன் உறுவர்க்கும்- முனிவருக்கும் பெறற்பால்- நிகழப் போவதை (வாழ்க்கையின் போது) அனையவும்- அனைத்தும் அன்னவாம்- அதே போன்றதே வறப்பில் -வறட்சியில், … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

ஈகை – நாலடியார் நயம்


ஈகை – நாலடியார் நயம் முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கு நோயுள – கொன்னே பரவன்மின்! பற்றன்மின்! பாத்துண்மின்! யாதூங் காவன்மின்! கைத்துண்டாம் போழ்து சாநாண் முன்னரே- சாகும் நாளுக்கு முன்பே முனிதக்க மூப்புள – வெறுக்கத்தக்க மூப்புள்ளது பீடழிக்கு நோயுள- அழிவு தரும் நோய் உள்ளது பரவன்மின் – தாழ்ந்து மனம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

அஞ்சிச் சாவதில் சுகமேது? – நாலடியார் நயம்


அஞ்சிச் சாவதில் சுகமேது? – நாலடியார் நயம் பிறன்மனை நயவாமை புக்கவிடத் தச்சம், போதரும் போதச்சம், துய்க்குமிடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம், எக்காலும் அச்சந்தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்? உள்ளே போகும் போதும், திரும்பி வரும் போதும், இன்பத்தை அனுபவிக்கும் போதும், யாருக்கும் தெரியாமற் காக்கும் போதும் அச்சமே. இவ்வாறு எப்போதும் அச்சம் தரும் என்றால் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

பொறையுடைமை – நாலடியார் நயம்


பொறையுடைமை – நாலடியார் நயம் தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க; தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க;- வான் கலிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல் தக்கார்- நல்லோர், நல்ல குணமுடையோர் வான் கலிந்த உலகம்- வானத்தால் வளைக்கப்பட்ட உலகம் இடைமிடைந்த – இடைச் செருகல் செய்யப்பட்ட உண்ணார் என்னும் சொல்லுக்கு “உண்ணீர் உண்ணீர் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

சினமின்மை -நாலடியார் நயம்


சினமின்மை -நாலடியார் நயம் கூர்த்து நாய் கவ்விக் கொளக் கண்டுந் தம்வாயாற் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கில்லை;-நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய் சொல்லியக்காற் சொல்பவோ, மேன்மக்க டம்வாயான் மீட்டு? கூர்த்து – வெகுண்டு பேர்த்து – பதிலுக்கு ஒரு நாய் வெறி கொண்டோ சினந்தோ ஒருவரைக் கடித்தால் அவர் பதிலுக்கு நாயைக் கடிக்க மாட்டார். தரம் தாழ்ந்து … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

தூய் தன்மை – நாலடியார் நயம்


தூய் தன்மை – நாலடியார் நயம் குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம்; மற்றிவற்றுள் எத்திரத்தாள் ஈர்ங்கோதை யாள்? குடரும் கொழுவும் குருதியும் என்பும்- குடல்களும், ரத்தமும், கொழுப்பும் எலும்புகளும் தடி- தடிமனான சதையைக் குறிக்கிறது வழும்பு- வழும்பு என்பது ஒரு கன்றுக்குட்டி பிறக்கும் … Continue reading

Aside | Posted on by | Tagged , , , , | Leave a comment

செல்வ நிலையாமை – நாலடியார் நயம்


செல்வ நிலையாமை – நாலடியார் நயம் ‘செல்வர் யாம்’  என்று தாஞ் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லிற் கருங்கோண்மூ வாய்திறந்த மின்னுப் போற் றோண்டி மருங்கறக் கெட்டு விடும் செல்வுழி -உழி என்பதற்கு இடம் என்று பொருள் செல்லும் இடம் புல்லடறிவாளர் -அறிவில்லாதவர் எல்லிற் – பகலில் கருங்கோண்மூ- கோண் என்பதற்கு … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment