Tag Archives: poems

தேவதை -கவிதை


தேவதை சத்யானந்தன் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment

விழிப்போக்கன் – கவிதை


கவிதை விழிப்போக்கன் சத்யானந்தன் என் விழிகள் காணாமற் போய் தடுமாறிய போது வரவேற்பறையில் என்னை ஒரு மலைப்பாம்பு சுற்றி வளைத்தது விழிகள் இல்லாத ஒரு விலங்கை விழுங்கத் தயங்கி அது என்னை விடுவித்தது நான் கண்களைத் தோலைத்தவன் கிடைத்து விடும் என் நெற்றியில் எழுதிக் கொண்டேன் சிலிகான் கண்கள் கட்டளைப்படி கேட்கப் பட்டதை மட்டும் பார்த்து … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

கலை – கவிதை


கவிதை கலை சத்யானந்தன் ஒரு மதுக்கடை நியான் வெளிச்சத்தை ஊசி வழி ரத்த நாளத்தில் செலுத்தும் வைத்தியனின் பிடியில் இருக்கிறான் தற்கொலையில் தோற்றவன் ஒருவன் அமிலச் சுனை வற்றியதால் பேனாவில் வாசனைத் திரவம் ஊற்றி எழுத அவன் எழுத்துக்களின் மணம் கவனம் பெற்றது எழுத்துக்களை நேராக்கும் சம்மட்டி என் வலது கையைப் பதம் பார்க்க இடது … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

கல்லூளி மங்கன் – கவிதை


கவிதை கல்லூளி மங்கன் சத்யானந்தன் நூறு ஆயிரம் லட்சம் பேர் வழிபடும் விக்கிரகத்தின் சிற்பி பெயர் ஆடிப்பெருக்குக்கு அர்ப்பணமான சுவடிகளுள் ஒன்றில் மேகத்தின் கனவு விழுந்த இடத்தில் முளைத்த தானியத்தில் எழுதியிருந்த அவன் பெயர் இரவு சிரட்டையில் விழுந்த சோற்றில் அவனுக்குத் தென்படவில்லை இரவின் போர்வையில் ஏய் தா டேய் இந்தாப்பா என்று மட்டுமே அழைக்கப்பட்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

சூழல் – கவிதை


கவிதை சூழல் சத்யானந்தன் விட்டில் புணரும் சுடர் போல் தன் மடி ஓடைகள் தானே உறிஞ்சலாகுமா ‘நன்றாயிருக்கிறது” என்னும் ஒற்றை வார்த்தை உதாசீன ரசனையாய் வெய்யிலின் கானல் நீர் செவிலியரின் புன்முறுவல் பிம்பங்கள் தாகத்தைக் கூராக்கும் சூழ்ந்து தழுவும் கடல் அலைகள் விமர்சனம் மதிப்புரை வெளிச்சம் தேடிய படைப்பாளி மழை மறைந்த தீவு ஒட்டகங்கள் சாதகப் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

டீஸலுடன் யுகசந்தி – கவிதை


கவிதை டீஸலுடன் யுகசந்தி சத்யானந்தன் கடற்புற பழங்குடி வேர்களைச் சூறையாடிய பாய் மரங்கள் போலன்றி உருமாறி இணைய தளங்களில் எதிர்ப்படும் ஓலைச்சுவடிகள் காப்புரிமையற்ற கச்சாப்பொருளாய் சில சமயம் கூரையின் கூறுகளாய் அச்சுறுத்தும் அம்மா பெரிய துறைமுகக் கப்பல்களாய் முனைவர் வரிசைப்படுத்தியவை எழுத்தாணி திரித்ததை விட்டதை தோற்றதை பதித்ததை மணல் வீடுகளை வருடிச் செல்லும் ஒரு ஓசை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

ஆவணம் – கவிதை


கவிதை ஆவணம் சத்யானந்தன் காலமாவது காலாவதியாவது பற்றிய கேள்வி முட்கள் நகர செருப்புக்களை ஊடுருவ முந்தும் வாகன முகப்பு விளக்கு சமிக்ஞை மின்சாரத் தடை விரித்த இருள் வெளி காட்டும் மெழுகு தீப வெளிச்சக் கூச்சம் உள்வாங்கி இணையும் இமைகள் கனவுக்கு ஒளியூட்டும் ஆவணம் ஆக்காமல்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

அது -கவிதை


கவிதை அது சத்யானந்தன் அவ்வசைவு அடி வயிற்றுள் பிஞ்சு விரல் நகர்வு மௌன நீர்ப்பரப்பின் மீதொரு சிறகடிப்பு மொட்டவிழும் பூ பனிக்கட்டி நீராகும் பரிணாமம் போலில்லை இரண்டு நிமிடம் இடைவெளி விட்டாலும் வாசித்ததை பறிக்கும் எதிர் இருக்கைப் பயணிக்குச் சேர்க்க முடியாமற் போன எதிர்வினை

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

இருக்கை மொழி – கவிதை


கவிதை இருக்கை மொழி சத்யானந்தன் வந்தவுடன் குரல் கொடுக்கும் நீத்தார் பிரதி நிதி காகம் பாத்திரத்தைத் தள்ளி ஓசைப் படுத்தும் பூனையல்ல உன் வருகை மௌனம் போர்த்திய் உள் ஓலங்கள் அழைப்பு மணி ஓசைக்குள் பொதிந்திருக்கும் உன் செலவாணி என்னிடம் இல்லை எனக்கு அன்னியமாயும் இருக்கலாம் அவசரமாய் அணிந்த மேலங்கி ஒன்றே எனக்கு ஆசுவாசம் அழைப்பு … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

கவிதை -காது வருடி


கவிதை காது வருடி சத்யானந்தன் புத்தகத்தை இரவல் கொடுத்தது இன்னொரு படைப்பாளிக்குச் செய்த துரோகமோ? அவன் திருப்பித் தந்த போது பக்க அடையாள அட்டை உடன் வரவில்லை அவன் பேசியபோது படைப்பாளியைக் குதறிய நகங்கள் சீண்டியதாகத் தென்படவில்லை முனை மழுங்கடிக்கப்பட்ட குச்சம் பொருத்தி இதமாய் காதுக்குள் வருடும் சொல்லாடலில் இருந்தான்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment