Tag Archives: pudhu kavithai

தனி வழியே போக வேண்டும்


தனி வழியே போக வேண்டும் எல்லாப் பயணங்களின் மறுபக்கமும் மௌனமே மௌனம் விளங்கிக் கொள்ளப் படுவதாக அல்லது விதைக்கப் படுவதாக மௌனத்தின் சுவாசத் துடிப்பை உணர இயன்றவர்கள் எதையும் பதிவு செய்வதில்லை அவர்களால் அலைகளின் ஆரோகண அவரோகணம் பயணம் என்று புரிய இயலும் பறவைகளின் சில சிறகடிப்புகள் மட்டுமே பயணம் என்றும் சாலைகளின் சந்திப்புகள் அருகில் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment

கண்ணாமூச்சி


கண்ணாமூச்சி ஆழ்மன அடுக்குகளில் நெருடும் வடுக்களா பிரமைகளா அனுமானங்களா அன்னிய முகச் சலனங்கள் விட்டுச் சென்ற தடங்களா ஏதோ ஒன்று வலி வலிமையாகக் காரணம் தற்காலிகமாகத் தவிர்க்கலாம் தப்பிக்க முடியாது என்பதே வலியின் அச்சுறுத்தல் எனது உனது என இரண்டு வலிகள் ஏவாள் காலத்திலிருந்து என் மீட்பராகவே இருப்பது உனக்கு வலி மிகுந்ததானது காத்திருந்து கால் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | 2 Comments

என் இரவு – உன் இரவு


என் இரவு – உன் இரவு என் இரவு உன் இரவு வெவ்வேறு பகலின் தடங்களின் சில நேர்கோடுகள் இடைப் பட்டு என் இரவு கச்சிதமாய் வண்ணங்கள் குழைக்கும் தூரிகைகள் உன் விரல்கள் இடைப்பட்டுத் தீட்டும் பதிவுகளில் உன் இரவு விரிவதாய் மௌனம் விழுங்கியதை என் இரவும் சொற்களில் விடுபட்டதை உன் இரவும் அசை போடும் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment

பின்னொரு இரவில் மீள்வோம்


பின்னொரு இரவில் மீள்வோம் சிக்குண்ட நூல் கண்டு ஐந்து மணிகள் உன் உடல் அதிர்வு சுருதியில் கண்டின் நுனி ஒன்று வசப்படும் முன் பகல் நிராகரித்த வானவில் இடைப்பட்டு உள் சுருதி மீட்டல் நின்றது வண்ணங்களை நெய்ய முனைந்தாய் இரவின் நிறம் ஒன்றே அசலாய் என் அவதானிப்பு விடிந்த போழ்தில் என் இரு கை விரல்களில் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | 2 Comments

காகிதப் புலி – கவிதை


கவிதை காகிதப் புலி சத்யானந்தன் எதற்கடா இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் என் நகங்களை பற்களை ஒரு மேடு ஒரு பள்ளம் அதே செயற்கையுடன் ஒரு சுனை நீ எப்போதாவது இட்டு வரும் தொத்தல் ஆடு ஓடத் தோதில்லாதது நான் துரத்தலைத் துறந்தாயிற்று அன்றாடம் நீ அறுத்துப் போடும் மாமிசம் கம்பிகளுக்கு வெளியே காணும் வேடிக்கைக் கும்பலுக்கே … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , , | Leave a comment