Tag Archives: Puthuk kavithai

தொன்மம்


தொன்மம் அன்று நான் அழைத்தபோதெல்லாம் உங்கள் கைபேசி அழைப்பை ஏற்காவில்லை என் குறுஞ்செய்திகள் கண்டுகொள்ளப் படவில்லை நேரில் சந்தித்த போதும் நீங்கள் பிடி கொடுக்கவில்லை உங்களைத் தேடிய சூழ்நிலை மட்டுமல்ல பின்னர் என் தேவையா இல்லை உங்கள் இடமா எது காலாவதியானது நினைவில்லை இன்று உங்கள் பெயரும் கைபேசி எண்ணும் என்னுடையதில் தொன்மமாய் (published in … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

புதிய சொல்


புதிய சொல் சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது கலையுலகும் இயங்குலகும் செக்கைச் சுற்றிய வட்டத்தில் வெவ்வேறு புள்ளிகளில் தினமும் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

செய்தி வாசிப்பு


செய்தி வாசிப்பு சத்யானந்தன் சத்யானந்தன் யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக அளவில் ஒப்பந்தம் போட்டு மரங்களைக் கடத்துகிறார்கள் விவசாயி சாகுபடி செய்யாமல் தற்கொலை செய்து விட்டார் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

சதுரங்கத் தனிமை


(சொல்வனம் 13.5.2015 இதழில் வெளியானது) சதுரங்கத் தனிமை இசை ஞானம் காரணமில்லை மற்றொரு பறவைக்கான ஒலி சமிக்ஞையே ஒரு பறவையின் சீழ்கை இருப்பைத் தாண்டாத பரிமாற்றங்களில் பறவையின் உலகு இருப்பு பற்றிய முரண்கள் எதிரும் புதிருமான சதுரங்கம் உனக்கும் எனக்கும் தான் அதன் கட்டங்களுள் யாரும் தனியனே மின்மொழியாடலில் கவனமில்லாமல் வாசித்த பேசிய பரிமாற்றங்கள் கூரேற்றும் … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

அபிநயம்


(26.4.2015 puthu.thinnai.com இணைய இதழில் வெளியானது) அபிநயம் தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் … Continue reading

Posted in கவிதை | Tagged , | 1 Comment

தண்ணீர்கள்


தண்ணீர்கள் சத்யானந்தன் குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே? மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன் மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி நாட்களில் துண்டுப் பிரசுரங்களாய் அவர் பதித்த பாடல்கள் எங்கே மறைந்தன? சுருதி மாறாத மின் விசிறிச் சொல்லாடலை அவதானிக்கும் பொழுதுகளில் அவர் நிழலாடுகிறார் இதன் தோழமை … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

ஈசல்கள் அலைந்தன கோயில் முற்றத்தில்


ஈசல்கள் அலைந்தன கோயில் முற்றத்தில் பச்சைக் கன்றுக்குட்டியின் துள்ளல் ஒரு பொருட்டல்ல உனக்கு விடுதலையை தரிசித்தல் சாத்தியமில்லை உன் நோக்கில் பட்டாம் பூச்சிகளின் ஆயுளை மையப் படுத்துவாய் அதன் பறத்தல் உயிர்ப்பு அளவுக்கு உட்பட்டதா? வியப்புக்குரியதில்லையா? மரணம் மின்னலாய் வந்து போகும் நொடியில் அது ஒரு விடுதலை இல்லையோ என்று பதறுவேன் கதவுகள் வைக்கும் முன் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

இக்கணம்


(image courtesy: http://www.seathos.org/tag/overfishing) இக்கணம் பாம்பின் காலறிந்த தவளைகள் அரவம் கேட்டுத் தப்பிக் குதித்தன பெற்றோரைப் பிரிந்தே இருப்பதென்பதில் துக்கமின்றி வண்ணம் காட்டியது வானவில் மரந்தம் இல்லாத தும்பைப் பூவில் ஒரு வண்டு தேனருந்திப் பறந்தது தேடுவோர் இல்லாத சருகுகள் ஒரு துடைப்பம் வரும் முன் கலைந்திருந்தன அறிமுகமில்லா ஆளின் தடத்தில் சாலையைக் கடந்த இரு … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment

தப்பிப்பு


http://puthu.thinnai.com/?p=15474 தப்பிப்பு சத்யானந்தன் ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் பதுங்கும் நண்டு வேட்டையிலிருந்து தப்பித்த ஒன்று தான் முட்டையிலிருந்து வெளி வந்த சில மணி நேரத்தில் வல்லூறுக்கு அகப்படாதவையே கடலுள் உயிர்க்கும் ஆமைகள் தராசுத் தட்டுக்கோ செண்டுக்கோ சரத்துக்கோ … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

தேவதை -கவிதை


தேவதை சத்யானந்தன் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment