Tag Archives: puthukavithai

தப்பிப்பு


http://puthu.thinnai.com/?p=15474 தப்பிப்பு சத்யானந்தன் ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் பதுங்கும் நண்டு வேட்டையிலிருந்து தப்பித்த ஒன்று தான் முட்டையிலிருந்து வெளி வந்த சில மணி நேரத்தில் வல்லூறுக்கு அகப்படாதவையே கடலுள் உயிர்க்கும் ஆமைகள் தராசுத் தட்டுக்கோ செண்டுக்கோ சரத்துக்கோ … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

தேவதை -கவிதை


தேவதை சத்யானந்தன் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment

திசை மாறும் நிழல்கள் – கவிதை


கவிதை திசை மாறும் நிழல்கள் சத்யானந்தன் பரணிலிருந்து கிளம்பும் பள்ளி விளையாட்டு மைதான தூசி தழும்புகளை மீள் வாசிப்பு செய்ய நேரம் இடம் காலம் ஏதில்லை உணவு மேஜையோ தொலைபேசி மூலையோ கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகப் பக்கங்கள் எதனுடனும் பொருந்தவில்லை குளம்புத் தடங்களும் காலடிச் சுவடுகளும் சக்கர அடையாளங்களும் மாறும் நிழல்கள் திசை மாறும் இரவு … Continue reading

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

படுக்கையறைச் சலனங்கள் – கவிதை


கவிதை படுக்கையறைச் சலனங்கள் சத்யானந்தன் கைமாறி இலக்கடைந்த கூடைப்பந்தும் தலையணைக்குள் சாட்டையாய் மேலெழும்பும் கைப்பெட்டியை மீறி சுருட்டி வைக்கப் பட்ட வரைபடக் கோடுகள் குழல் விளக்கில் தழல் தேடும் காலச் சிறகுடன் ஈசல்கள் ஆண்கரத் தாழிடலில் வெட்டுண்டு துடிக்கும் வாலை விட்டு முன்னகரும் மர(பு) பல்லி சட்டை உரித்த இடம் எது? இமைகள் திறந்ததும் நழுவும் … Continue reading

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

பரிணாமம் – கவிதை


கவிதை பரிணாமம் சத்யானந்தன் ஆணாயிருக்கும் போது மேகத்திலேறி அமர்ந்து உஷ்ணத் தேடலில் தண்ணீர் பெண்பால் தண்ணீர் சுவாசம் தேடும் மீன்களின் முகவரி எப்போதும் நிகழாய் காலம் செங்கற் சூளையின் புகை மூட்டம் மண்ணின் தற்காலிகப் பரிணாமச் செய்தி

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

விழிப்பு – கவிதை


கவிதை விழிப்பு சத்யானந்தன் ஊரோடு விழித்து சலசலத்து உறங்கி கோலம் உடுத்தி குடும்பப் பாங்காய் தெருக்கள் நெடுஞ்சாலைகள் போலன்றி புரண்டு படுக்காமல் பூமி நனையும் வரை விழித்திருக்கும் விதை விழிப்பு சாவியாய்ப் பொருந்தும் பூட்டுக்கள் அனேகம் வாய் பிளந்திருக்க விவாதங்கள் வெளிச்சம் தொட்டும் விஷயங்கள் இருளிலும்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

மௌனம் சம்மதமா ? – கவிதை


கவிதை மௌனம் சம்மதமா ? சத்யானந்தன் சிந்தும் வியர்வைக்குக் கருவிகல் கவுரவம் சேர்த்தா? வேலை வாங்கும் வித்தைகள் பெருக வழி வகுத்ததா? கைவினைக் கலையை இயற்கை உணவைக் காவு வாங்கிய இயந்திரங்களின் பொம்மலாட்டத்தில் ஆறறிவாளி பொம்மையானது முடிவா? தொடக்கமா? கடிகார வடிவில் முதலில் நுழைந்த மின்னணு அடுப்பு வரை வளர்ந்து வீட்டை ஆக்கிரமிக்கும் சாதனங்களாய் வளர்ச்சி … Continue reading

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

பிடிப்பு – கவிதை


கவிதை பிடிப்பு சத்யானந்தன் உங்கள் வரவேற்பறைக்கும் எங்களதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை சாதனங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரம் நித்தம் அரங்கேறும் மேடையே என் வீடும் பொருளே பொருட்டானதின் பொருள் பிடிபடாதோரே என் உறவும் சுற்றமும் பிணைப்புகள் புகார்கள் அளவில் தன்மையில் வீட்டாருக்கும் பெயர் மட்டுமே வேறு என்றாலும் உங்கள் செருப்பு என் காலில் கடிக்கத்தான் செய்கிறது

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

உள்ளுணர்வு – கவிதை


கவிதை உள்ளுணர்வு சத்யானந்தன் தாழ், தாழை உடைத்துக் கதவைப் பிளக்கும் கோடரி, பல்லியின் பாதம், திரியைப் பற்றும் சுடர் சொல்லின் தோற்றங்கள் அனேகம் ஒரு புன்னகை, கை குலுக்கல், தொலை பேசி அழைப்பு, வாழ்த்து அட்டை, பூங்கொத்து, வண்ணத்தாளுள் பரிசு, சக ஊழியர், அதிகாரி – பெண்மைச் சங்கிலியின் கண்ணிகள் ஒன்று போலும் வெவ்வேறாயும் மடிப்புக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

அபிமன்யுவின் புன்னகை – கவிதை


கவிதை அபிமன்யுவின் புன்னகை சத்யானந்தன் துளிர்க்கும் உதிரும் சிறகுகளை அசைக்கும் மரத்தைத் தன் இனமென்றே குலவும் பறவை மேகத்தை அல்ல பட்டத்தை அஞ்சும் கயிறின் கட்டுப்பாட்டு சாத்தியங்களை ரசிக்க கூடு கட்டும் கலைப்பாங்கு போதுமா? கம்பிகளை வளைக்கும் கூண்டு செய்யும் குறடு வேண்டாமா? மேகத்தை அஞ்சாது பறவை கோடி வயிறு குளிரும் நன்னீரை அடக்கமாய் சுமக்கும் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment