Tag Archives: tamil free verse

எங்கள் ஊர்


எங்கள் ஊர் சத்யானந்தன்   எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது சிறுவர்கள் தெருவில் விளையாடுவதில்லை கணிப்பொறி தொலைக்காட்சி திரைகளின் முன்னே சிறுவர்கள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது வரப்புக்களின் இடையே பயிர்கள் இல்லை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

நாற்பது ஏரிகள் இன்னும் காணாமற் போகவில்லை


நாற்பது ஏரிகள் இன்னும் காணாமற் போகவில்லை சென்னையைச் சுற்றி சுமார் 1200 சதுர கிமி அளவுக்கு அதாவது 30, 40 கிமி தொலைவுக்கு உள்ள ஏரிகளில் இன்னும் ஆக்கிரமிக்கப் படாதவையாக 40 ஏரிகளை அடையாளம் கண்டுள்ளது தமிழக அரசு. இவற்றை ஆழப் படுத்தித் தூர் வாரி அவற்றைச் சுற்றி நடைபாதைகள் போன்றவை அமைக்கப்பட்டு, வயல்களுக்கும் ஏரிகளுக்குமான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

சத்துணவு செலவு அல்ல முதலீடு


சத்துணவு செலவு அல்ல முதலீடு தமிழக அரசு குழந்தைகளின் சத்துணவு ஊட்டச்சத்துடன் சுவை மிகுந்ததாகவும் அமையும் என்று அறிவித்திருப்பது நல்ல செய்தி. குழந்தைகளுக்கு அதிக செலவில்லாமல் ஊட்டச்சத்து தர என்ன வழி என்பதை பெற்றோருக்கு உணர்த்தி அவர்கள் விழிப்புணர்வு பெற வழி வகுப்பது நீண்ட காலக் கனவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு உடனடியாகக் கிடைப்பது சத்துணவு. இது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | 1 Comment

அதிசயமாக தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம்


அதிசயமாக தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம் நீல பத்மானபனின் தலைமுறைகள் நாவல் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக அசோக மித்திரனால் பாராட்டப் பட்டது. இதன் மூலக்கதையை எடுத்துத் திரைவடிவில் வந்த மகிழ்ச்சி என்னும் திரைப்படம் நாவலில் முன்வைக்கப் பட்ட நாட்டார் மரபு மற்றும் குடும்ப அமைப்பைக் கோட்டை விட்டுவிட்டது. என்றாலும் ஒரு தமிழ்ப்படம் இந்த அளவு கலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

தப்பிப்பு


http://puthu.thinnai.com/?p=15474 தப்பிப்பு சத்யானந்தன் ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் பதுங்கும் நண்டு வேட்டையிலிருந்து தப்பித்த ஒன்று தான் முட்டையிலிருந்து வெளி வந்த சில மணி நேரத்தில் வல்லூறுக்கு அகப்படாதவையே கடலுள் உயிர்க்கும் ஆமைகள் தராசுத் தட்டுக்கோ செண்டுக்கோ சரத்துக்கோ … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment

பரிணாமம் – கவிதை


கவிதை பரிணாமம் சத்யானந்தன் ஆணாயிருக்கும் போது மேகத்திலேறி அமர்ந்து உஷ்ணத் தேடலில் தண்ணீர் பெண்பால் தண்ணீர் சுவாசம் தேடும் மீன்களின் முகவரி எப்போதும் நிகழாய் காலம் செங்கற் சூளையின் புகை மூட்டம் மண்ணின் தற்காலிகப் பரிணாமச் செய்தி

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

விழிப்பு – கவிதை


கவிதை விழிப்பு சத்யானந்தன் ஊரோடு விழித்து சலசலத்து உறங்கி கோலம் உடுத்தி குடும்பப் பாங்காய் தெருக்கள் நெடுஞ்சாலைகள் போலன்றி புரண்டு படுக்காமல் பூமி நனையும் வரை விழித்திருக்கும் விதை விழிப்பு சாவியாய்ப் பொருந்தும் பூட்டுக்கள் அனேகம் வாய் பிளந்திருக்க விவாதங்கள் வெளிச்சம் தொட்டும் விஷயங்கள் இருளிலும்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

மௌனம் சம்மதமா ? – கவிதை


கவிதை மௌனம் சம்மதமா ? சத்யானந்தன் சிந்தும் வியர்வைக்குக் கருவிகல் கவுரவம் சேர்த்தா? வேலை வாங்கும் வித்தைகள் பெருக வழி வகுத்ததா? கைவினைக் கலையை இயற்கை உணவைக் காவு வாங்கிய இயந்திரங்களின் பொம்மலாட்டத்தில் ஆறறிவாளி பொம்மையானது முடிவா? தொடக்கமா? கடிகார வடிவில் முதலில் நுழைந்த மின்னணு அடுப்பு வரை வளர்ந்து வீட்டை ஆக்கிரமிக்கும் சாதனங்களாய் வளர்ச்சி … Continue reading

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

பிடிப்பு – கவிதை


கவிதை பிடிப்பு சத்யானந்தன் உங்கள் வரவேற்பறைக்கும் எங்களதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை சாதனங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரம் நித்தம் அரங்கேறும் மேடையே என் வீடும் பொருளே பொருட்டானதின் பொருள் பிடிபடாதோரே என் உறவும் சுற்றமும் பிணைப்புகள் புகார்கள் அளவில் தன்மையில் வீட்டாருக்கும் பெயர் மட்டுமே வேறு என்றாலும் உங்கள் செருப்பு என் காலில் கடிக்கத்தான் செய்கிறது

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

உள்ளுணர்வு – கவிதை


கவிதை உள்ளுணர்வு சத்யானந்தன் தாழ், தாழை உடைத்துக் கதவைப் பிளக்கும் கோடரி, பல்லியின் பாதம், திரியைப் பற்றும் சுடர் சொல்லின் தோற்றங்கள் அனேகம் ஒரு புன்னகை, கை குலுக்கல், தொலை பேசி அழைப்பு, வாழ்த்து அட்டை, பூங்கொத்து, வண்ணத்தாளுள் பரிசு, சக ஊழியர், அதிகாரி – பெண்மைச் சங்கிலியின் கண்ணிகள் ஒன்று போலும் வெவ்வேறாயும் மடிப்புக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment