Tag Archives: tamil kavithai

உள்ளுணர்வு – கவிதை


கவிதை உள்ளுணர்வு சத்யானந்தன் தாழ், தாழை உடைத்துக் கதவைப் பிளக்கும் கோடரி, பல்லியின் பாதம், திரியைப் பற்றும் சுடர் சொல்லின் தோற்றங்கள் அனேகம் ஒரு புன்னகை, கை குலுக்கல், தொலை பேசி அழைப்பு, வாழ்த்து அட்டை, பூங்கொத்து, வண்ணத்தாளுள் பரிசு, சக ஊழியர், அதிகாரி – பெண்மைச் சங்கிலியின் கண்ணிகள் ஒன்று போலும் வெவ்வேறாயும் மடிப்புக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

அபிமன்யுவின் புன்னகை – கவிதை


கவிதை அபிமன்யுவின் புன்னகை சத்யானந்தன் துளிர்க்கும் உதிரும் சிறகுகளை அசைக்கும் மரத்தைத் தன் இனமென்றே குலவும் பறவை மேகத்தை அல்ல பட்டத்தை அஞ்சும் கயிறின் கட்டுப்பாட்டு சாத்தியங்களை ரசிக்க கூடு கட்டும் கலைப்பாங்கு போதுமா? கம்பிகளை வளைக்கும் கூண்டு செய்யும் குறடு வேண்டாமா? மேகத்தை அஞ்சாது பறவை கோடி வயிறு குளிரும் நன்னீரை அடக்கமாய் சுமக்கும் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

எதிர் ஒலிகள் – கவிதை


கவிதை எதிர் ஒலிகள் சத்யானந்தன் மேகங்களை ஒழுங்கு செய்யும் துடைப்பம் மழை நின்ற பின் தென்பட வில்லை அன்று பௌர்ணமி இல்லை இரவு இரவை விழுங்கிய பல்லி வெளிப்பக்கம் திறக்கும் சாளர இடுக்கில் நசுங்கியிருந்தது நொடி எறுபுகள் மொய்த்தன பகலில் பகலில் குகையை விட்டு வராத ஆணொருவன் கருப்பையுடன் அலைகிறான் தேடி பள்ளத்தாக்கில் ஒரு குழந்தையின் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

அணி – கவிதை


கவிதை அணி சத்யானந்தன் இசைக்குழுவில் ஒருவனுக்கு பல்லி நகங்கள் வளர்ந்ததும் அவன் மாட வீதியிலிருந்து சுவரை மீட்டினான் சில ராகங்கள் கை கோர்த்து தேரோட்டத்தை நிறுத்தின திருவிழாவில் சேவல் நகம் முளைத்த இரு கிளிகள் மோதின பூனை ஒரு வழியாகக் கண் மூட அதிர் வேட்டில் வானம் ஒளிர்ந்தது தன் சிறகுகளைத் தேடி நடந்து அலைந்த … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

விழிப்போக்கன் – கவிதை


கவிதை விழிப்போக்கன் சத்யானந்தன் என் விழிகள் காணாமற் போய் தடுமாறிய போது வரவேற்பறையில் என்னை ஒரு மலைப்பாம்பு சுற்றி வளைத்தது விழிகள் இல்லாத ஒரு விலங்கை விழுங்கத் தயங்கி அது என்னை விடுவித்தது நான் கண்களைத் தோலைத்தவன் கிடைத்து விடும் என் நெற்றியில் எழுதிக் கொண்டேன் சிலிகான் கண்கள் கட்டளைப்படி கேட்கப் பட்டதை மட்டும் பார்த்து … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

கலை – கவிதை


கவிதை கலை சத்யானந்தன் ஒரு மதுக்கடை நியான் வெளிச்சத்தை ஊசி வழி ரத்த நாளத்தில் செலுத்தும் வைத்தியனின் பிடியில் இருக்கிறான் தற்கொலையில் தோற்றவன் ஒருவன் அமிலச் சுனை வற்றியதால் பேனாவில் வாசனைத் திரவம் ஊற்றி எழுத அவன் எழுத்துக்களின் மணம் கவனம் பெற்றது எழுத்துக்களை நேராக்கும் சம்மட்டி என் வலது கையைப் பதம் பார்க்க இடது … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

கல்லூளி மங்கன் – கவிதை


கவிதை கல்லூளி மங்கன் சத்யானந்தன் நூறு ஆயிரம் லட்சம் பேர் வழிபடும் விக்கிரகத்தின் சிற்பி பெயர் ஆடிப்பெருக்குக்கு அர்ப்பணமான சுவடிகளுள் ஒன்றில் மேகத்தின் கனவு விழுந்த இடத்தில் முளைத்த தானியத்தில் எழுதியிருந்த அவன் பெயர் இரவு சிரட்டையில் விழுந்த சோற்றில் அவனுக்குத் தென்படவில்லை இரவின் போர்வையில் ஏய் தா டேய் இந்தாப்பா என்று மட்டுமே அழைக்கப்பட்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

சூழல் – கவிதை


கவிதை சூழல் சத்யானந்தன் விட்டில் புணரும் சுடர் போல் தன் மடி ஓடைகள் தானே உறிஞ்சலாகுமா ‘நன்றாயிருக்கிறது” என்னும் ஒற்றை வார்த்தை உதாசீன ரசனையாய் வெய்யிலின் கானல் நீர் செவிலியரின் புன்முறுவல் பிம்பங்கள் தாகத்தைக் கூராக்கும் சூழ்ந்து தழுவும் கடல் அலைகள் விமர்சனம் மதிப்புரை வெளிச்சம் தேடிய படைப்பாளி மழை மறைந்த தீவு ஒட்டகங்கள் சாதகப் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

பெட்டிக்குள் – கவிதை


கவிதை பெட்டிக்குள் சத்யானந்தன் தார் சாலையின் மீது தயங்கி வேர் தேடும் விழுது தண்ணீர் தொட்டியின் மேலே உதிரும் உணவுத் துகள் பற்றும் வண்ண மீன்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைபட்ட தண்ணீர் காட்சியாய் அசையும் கால் நீ ட்ட இடமின்றி சுமைகளுடன் நீ என் எதிரிருக்கும் இந்த ரயில் பெட்டிக்குள்

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

நகர்வு – கவிதை


கவிதை நகர்வு சத்யானந்தன் மா பூக்கும் காலத்தில் தோப்புக்குள் புகலாம் ஆடிக் காற்று வீச்சுக்குள் அதே வேகத்தில் மோதலாம் வரப்பு தாண்டும் மார்கழி வயல் மணத்தை வரப்போரம் வருடலாம் பானகம் நீர் மோர் பங்குனி உத்திரப் பந்தல்கள் காணலாம் வேறு எதுவும் சாத்தியமில்லை ஓடும் ரயிலில் பின்னகரலாம்

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment