Tag Archives: tamil literature

கண்ணாமூச்சி


கண்ணாமூச்சி ஆழ்மன அடுக்குகளில் நெருடும் வடுக்களா பிரமைகளா அனுமானங்களா அன்னிய முகச் சலனங்கள் விட்டுச் சென்ற தடங்களா ஏதோ ஒன்று வலி வலிமையாகக் காரணம் தற்காலிகமாகத் தவிர்க்கலாம் தப்பிக்க முடியாது என்பதே வலியின் அச்சுறுத்தல் எனது உனது என இரண்டு வலிகள் ஏவாள் காலத்திலிருந்து என் மீட்பராகவே இருப்பது உனக்கு வலி மிகுந்ததானது காத்திருந்து கால் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | 2 Comments

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 சத்யானந்தன் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | 2 Comments

காதலுடன் அவள்


கவிதை காதலுடன் அவள் சத்யானந்தன் முதலில் கொண்டு வந்தாள் இருள் பின் முதுகிலிருந்து இறக்கினாள் சிலுவை ஆணிகளை அதிக வலியில்லாமல் அகற்றி காற் சங்கிலிகளை கவனமாகக் கழற்றி மருந்திட்டாள் ரத்தம் வியர்வை நீக்கி தன் விரிந்த மடியில் ஏற்றுக் கொண்டாள் வெய்யிலும் சாட்டையடியும் எழுப்ப மீண்டும் சிலுவை மறுபடி இருளோடு வந்தாள் காதலுடன் அவள் பகலெல்லாம் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம்


கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம் செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச் செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூம் பெற்றி தரும்  (அதிகாரம் கூடா நட்பு) செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | 2 Comments

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13 சத்யானந்தன் யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா?


சிறுகதை பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா? சத்யானந்தன் இரவு மணி பதினொன்றரை. பெர்த் அதிர்ந்தது ஒலியுடன். அரைத் தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் போது ரயில் டிக்கெட் பரிசோதிக்கும் டிடீஈ எழுப்பினார். எனது மொபைலில் இருந்த டிக்கெட் பற்றிய குறுஞ்செய்தியை அவரிடம் அந்த அரைத் தூக்கத்தில் காட்டுவது என்பது பெரிய சவாலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம்


தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம் இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் துன்னித் தொலைமக்க டுன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார் (அதிகாரம்: சுற்றம் தழால்) இன்னர் – இவர்கள் இனையர்- இந்தத் தன்மை கொண்டவர்கள் எமர்- எம் மனிதர்கள் பிறர்- அன்னியமானவர் என்னும்- என்றும் இலராம்-இல்லாதவராம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம்


தொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா? -நாலடியார் நயம் கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு கேண்மை – நட்பு எஞ்ஞான்றும் – என்னாளும் குருத்திற்- கரும்பின் முன் பகுதி – மேல் பகுதி எதிர்செலத்தின் – மறுபக்கம், அடிப்பக்கம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம்


நல்ல குலம் எது? தீய குலம் எது? -நாலடியர் நயம் நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்வள வல்லாற் பொருளில்லை – தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி  ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் (அதிகாரம்: தாளாண்மை) சொல்வள வல்லால் – சொல்வளம் மட்டுமே வேறொன்றுமில்லை தொல் சிறப்பு- பழம் பெருமை – மூதாதையர் பற்றிய பெருமிதம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment

யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம்


யாரைச் சார்ந்தால் நிரந்தர மனநிம்மதி கிட்டும்? – நாலடியார் நயம் இற்சார்வின் ஏமாந்தோம், ஈங்கமைந்தோம், என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பேதையார்; அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர் (அதிகாரம் – பெருமை) இற்சார்வின் – இந்த சார்பு நிலையில் ஈங்கமைந்தோம் – இங்கே வந்து சேர்ந்தோம் பொச்சாந்து- பொய் + சாந்து … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment