Tag Archives: tamil poem

பிரித்தறியாமை


பிரித்தறியாமை எந்த ஊர்ச் செங்கற் சூளைக் கல் எந்தக் கட்டிடத்தில் எந்தச் சுவருள் ஐக்கியமானது? கடற்பரப்பில் அன்று புள்ளியாய்த் தெரிந்த அதே கட்டுமரமா இன்று கரையேறிக் கிடக்கிறது? வாகன நெரிசலில் மருத்துவ விடுதியில் உணவகத்தில் ரயில் நிலையத்தில் காந்திருந்த வரிசைகளுக்குள் என்ன வித்தியாசம்? ராட்சத வணிக வளாகத்தில் எதிர் எதிர்ப்பக்கம் நகரும் படிக்கட்டுகளில் மேற்தளம் செல்பவன் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | 1 Comment

சூசகம்


சொல்வனம் 26.4.2015 இதழில் வெளியான கவிதை. சூசகம் மண்ணின் மடியில் அடைக்கலமான மழை நீர் விரவியதெங்கே வேர்கள் அறியும் வேர்களின் உயிர்ப்பும் கிரகிப்பும் தேடலும் அறியும் இலை பூ காய் மனிதன் வீழ்த்தியோ பருவ மாற்றமோ காற்றின் வீச்சோ இவை உதிரவும் மீண்டு வரவும் மீண்டும் மீண்டும் வரவும் அறியும் ஒவ்வொரு மீட்சியிலும் வெவ்வேறாய் வா … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

அபிநயம்


(26.4.2015 puthu.thinnai.com இணைய இதழில் வெளியானது) அபிநயம் தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் … Continue reading

Posted in கவிதை | Tagged , | 1 Comment

சமூக வரைபடம்


சமூக வரைபடம் சத்யானந்தன் எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய் தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும் மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று தொனிக்காத சொற்களுண்டா? வர்க்கங்களின் காப்புரிமை உடைய சொற்களுண்டு விற்பவர் மட்டுமல்ல வலை விரிப்பவர் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

சுத்தம் செய்வது


சுத்தம் செய்வது சத்யானந்தன் உணவகத்தின் சுய சேவையிலும் நேரந்தான் ஆகிறது களை எடுப்பதும் சுத்தம் செய்வதும் கத்தியின்றி ரத்தமின்றி சாத்தியமில்லை என்றான் அதற்கு மட்டுமே ஆனதென்றாலும் தோசைக்கல் மேல் துடைப்பம் எப்போது பார்த்தாலும் நெருடுகிறது சொல்வதை கவனி வள்ளல்களையும் செங்கோல்களையும் உலகம் நிறையவே பார்த்தாகி விட்டது இன்னும் ஏன் பத்தில் ஒன்பது பரிதவிக்கிறார்கள் இடம் பொருள் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

பிடிமானம்


பிடிமானம் சத்யானந்தன் கதவுப்பிடிகளின் மீது வேகம் போலி நாசூக்கு தராதரம் சிலர் மட்டும் காட்டும் உரிமை அதிகார மைய அறைகளில் செயலாகப் பசையாக புழங்கும் வீட்டு வாசற் கைப்பிடியும் அவ்வாறே. அது அடிக்கடி அசையும் அமையும் சத்தம் அதிகமென்னும் அலட்டல் பாசாங்கே கைப்பிடிகளைத் தேடாதவன் வெறுங்கை வீசி வேகமாய் நடக்கிறான் வேற்றுக் கிரகம் நோக்கி இரவும் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

அங்கதம்


அங்கதம் சத்யானந்தன் சத்யானந்தன் இணையம் எப்போதும் விழித்திருக்கிறது வெளி உலகு நிழலுலகு இரண்டையும் விழுங்கி செரிக்க முடியாது விழித்திருக்கிறது மென்பொருளை மென்பொருள் காலாவதியாக்கியது காகிதம் ஆயுதம் இரண்டாலுமே ஆயுதம் பலமில்லை என்று நிலைநாட்ட முடியவில்லை மின்னஞ்சல் முக நூல் முகவரி ஒளித்த விற்ற விவ்ரம் புதிர் விரியும் வலையில் அரங்க அந்தரங்க இடைத் திரை ஊடகமாய் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

நீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்?


நீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்? ஒரு காத்தாடியின் மீதுள்ள படம் அல்லது வேலைப்பாடு யாருக்கும் புலப்படாது அதிகம் எழும்பும் முன் அதன் வண்ணம் தென்படலாம் நூலின் மீது அதை ஆயுதமாக்க என்ன பூசப்பட்டது எந்த நூல் ஆயுதம் என்பதும் யாருக்கும் தெரியாது அதை ஆட்டுவிப்பவர் தவிர நெசவுத்தறி நூல்கள் பாவில் ஆயுதமாவதில்லை பின்னர் வேறாக … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

சாலை மத்தியில் அமர்ந்தெழும் காக்கைகள்


சாலை மத்தியில் அமர்ந்தெழும் காக்கைகள் இரவை விடவும் மெதுவாக சில மிருகக் காட்சி சாலைக்குள் அசைந்திருந்தன இரவுக்கு சவாலாக மௌனம் அருங்காட்சியகத்தில் வரலாற்றின் மொழி பேசிக் கொண்டிருந்தது மனதின் கதவுகளைத் திறந்து மூடிப் போக்குவரத்தில் இரவின் இருளை பகலின் ஒளியை நகலெடுத்தன கனவுகள் விடியும் பொழுதில் சாலை மத்தியில் இறந்து கிடக்கும் விலங்கின் உடல் மீது … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

இக்கணம்


(image courtesy: http://www.seathos.org/tag/overfishing) இக்கணம் பாம்பின் காலறிந்த தவளைகள் அரவம் கேட்டுத் தப்பிக் குதித்தன பெற்றோரைப் பிரிந்தே இருப்பதென்பதில் துக்கமின்றி வண்ணம் காட்டியது வானவில் மரந்தம் இல்லாத தும்பைப் பூவில் ஒரு வண்டு தேனருந்திப் பறந்தது தேடுவோர் இல்லாத சருகுகள் ஒரு துடைப்பம் வரும் முன் கலைந்திருந்தன அறிமுகமில்லா ஆளின் தடத்தில் சாலையைக் கடந்த இரு … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment