Tag Archives: tamil poems

பிடிப்பு – கவிதை


கவிதை பிடிப்பு சத்யானந்தன் உங்கள் வரவேற்பறைக்கும் எங்களதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை சாதனங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரம் நித்தம் அரங்கேறும் மேடையே என் வீடும் பொருளே பொருட்டானதின் பொருள் பிடிபடாதோரே என் உறவும் சுற்றமும் பிணைப்புகள் புகார்கள் அளவில் தன்மையில் வீட்டாருக்கும் பெயர் மட்டுமே வேறு என்றாலும் உங்கள் செருப்பு என் காலில் கடிக்கத்தான் செய்கிறது

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

உள்ளுணர்வு – கவிதை


கவிதை உள்ளுணர்வு சத்யானந்தன் தாழ், தாழை உடைத்துக் கதவைப் பிளக்கும் கோடரி, பல்லியின் பாதம், திரியைப் பற்றும் சுடர் சொல்லின் தோற்றங்கள் அனேகம் ஒரு புன்னகை, கை குலுக்கல், தொலை பேசி அழைப்பு, வாழ்த்து அட்டை, பூங்கொத்து, வண்ணத்தாளுள் பரிசு, சக ஊழியர், அதிகாரி – பெண்மைச் சங்கிலியின் கண்ணிகள் ஒன்று போலும் வெவ்வேறாயும் மடிப்புக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

அபிமன்யுவின் புன்னகை – கவிதை


கவிதை அபிமன்யுவின் புன்னகை சத்யானந்தன் துளிர்க்கும் உதிரும் சிறகுகளை அசைக்கும் மரத்தைத் தன் இனமென்றே குலவும் பறவை மேகத்தை அல்ல பட்டத்தை அஞ்சும் கயிறின் கட்டுப்பாட்டு சாத்தியங்களை ரசிக்க கூடு கட்டும் கலைப்பாங்கு போதுமா? கம்பிகளை வளைக்கும் கூண்டு செய்யும் குறடு வேண்டாமா? மேகத்தை அஞ்சாது பறவை கோடி வயிறு குளிரும் நன்னீரை அடக்கமாய் சுமக்கும் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

எதிர் ஒலிகள் – கவிதை


கவிதை எதிர் ஒலிகள் சத்யானந்தன் மேகங்களை ஒழுங்கு செய்யும் துடைப்பம் மழை நின்ற பின் தென்பட வில்லை அன்று பௌர்ணமி இல்லை இரவு இரவை விழுங்கிய பல்லி வெளிப்பக்கம் திறக்கும் சாளர இடுக்கில் நசுங்கியிருந்தது நொடி எறுபுகள் மொய்த்தன பகலில் பகலில் குகையை விட்டு வராத ஆணொருவன் கருப்பையுடன் அலைகிறான் தேடி பள்ளத்தாக்கில் ஒரு குழந்தையின் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

அணி – கவிதை


கவிதை அணி சத்யானந்தன் இசைக்குழுவில் ஒருவனுக்கு பல்லி நகங்கள் வளர்ந்ததும் அவன் மாட வீதியிலிருந்து சுவரை மீட்டினான் சில ராகங்கள் கை கோர்த்து தேரோட்டத்தை நிறுத்தின திருவிழாவில் சேவல் நகம் முளைத்த இரு கிளிகள் மோதின பூனை ஒரு வழியாகக் கண் மூட அதிர் வேட்டில் வானம் ஒளிர்ந்தது தன் சிறகுகளைத் தேடி நடந்து அலைந்த … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

கவிதை -காது வருடி


கவிதை காது வருடி சத்யானந்தன் புத்தகத்தை இரவல் கொடுத்தது இன்னொரு படைப்பாளிக்குச் செய்த துரோகமோ? அவன் திருப்பித் தந்த போது பக்க அடையாள அட்டை உடன் வரவில்லை அவன் பேசியபோது படைப்பாளியைக் குதறிய நகங்கள் சீண்டியதாகத் தென்படவில்லை முனை மழுங்கடிக்கப்பட்ட குச்சம் பொருத்தி இதமாய் காதுக்குள் வருடும் சொல்லாடலில் இருந்தான்

Posted in கவிதை | Tagged , , , , , , , , , | Leave a comment

படகு வீட்டுக் காரன் – கவிதை


கவிதை படகு வீட்டுக் காரன் சத்யானந்தன் நல விசாரிப்பில் குரூர அங்கதம் ஏன்? சிறு வாடகை வசூலித்துப் படகுக்கும் நிராகரிக்கும் நகரில் நம் ஆரம்ப நாட்களுக்கும் கவுரவம் தந்தான் நம் பொருட்டே படகில் அவன் ஊதுபத்தி செய்து கொண்டிருப்பான் அவனுக்கு முன் யாரும் செய்யாதது அவன் குடும்பம் ஊருக்குள் வாழத் துவங்கிய போதும் அவன் துடுப்புக்களை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

பதிவுகள் – கவிதை


கவிதை பதிவுகள் சத்யானந்தன் மல்லிகைப் பந்தலே கூரை வரவேற்பரை தேவைப் படாது சுயமே ஆடை கூட்டத்தில் வெட்கப் பட ஏதுமில்லை தூரிகையின் கலவை ருசி கழுகுக்குப் பயந்து தரையில் விழுந்த அணிலின் கண நேர திகைப்பும் பின் ஓட்டமும் புறாக்களின் தானியத் தேட்டம் வரை மெழுகாய் இல்லை பனியாய் உருகும் போது நம்பகத் தன்மை பதிவுகளில்

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

ஃப்யூனிக்ஸ் விரகம் – கவிதை


கவிதை ஃப்யூனிக்ஸ் விரகம் சத்யானந்தன் சொற்களை எழுத்தும் நொடியும் ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு விதமாய் தொடவில்லையா? குட்டியை எலியை கிணற்றின் சுவர்களை தொட்டும் கவ்வியும் பற்றியும் பூனை அலைவதைப் பார் முளையாய் நிலத்தைத் தொட்டு ஒளி தேடும் விதையின் அந்தரங்கம் அறிவாயா? நிறங்கள் பின்னிச் சுடரும் கங்குகளாய் பிணைந்திருந்தோம் இருளும் விடிவெள்ளியும் தொட்ட பின்னும் தூக்கமில்லை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

காட்சி – கவிதை


கவிதை காட்சி சத்யானந்தன் பிழைக்கத் தெருவுக்கு வந்த நேரம் எந்தக் குரங்குக் குட்டியும் நழுவி தனியே அகப்படவில்லை வித்தைக்காரனாய் மந்திரவாதியாய் மனோவசியக்காரனாய் சொல்லாளனை முதலில் வேடிக்கைதான் பார்த்தேன் ஆட்டி வைக்கவும் பெட்டிக்குள் அடைக்கவும் பல்லைப் பிடுங்குவது தான் முதல் அடி என்று சொல்லித் தந்தான் புன்னாக வராளி ரசிகரல்ல கூட்டம் மகுடி அசைய அடைப்பில் சுருண்ட … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , | Leave a comment