Tag Archives: tamil short story

வாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும்


(image courtesy:bookandborrow.com) வாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும் வாஸந்தி “இடைவெளி” என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை தீராநதி அக்டோபர் 2013 இதழில் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படம் அல்லது முழுப்படம் பார்ப்பது போல இருக்கிறது. சிறுகதையைப் படிக்கும் போது. சமூக முக மூடிகளைத் தாண்டி நம்முள் உள்ள கோர முகத்தை அவர் வெளிப்படுத்த விரும்பி எழுதி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

புலம் பெயரும் இலங்கைத் தமிழ்ப் பெண் – அ. முத்துலிங்கத்தின் சிறுகதையில்


  புலம் பெயரும் இலங்கைத் தமிழ்ப் பெண் – அ. முத்துலிங்கத்தின் சிறுகதையில் லூக்கா 22:34 என்னும் தலைபில் காலச்சுவடு செப்டம்பர் 2013 இதழில் அ. முத்துலிங்கத்தின் சிறுகதையின் மையக் கதாப்பாத்திரம் மார்செலா. இலங்கைத் தமிழர் மையமாகும் கதைகளை நாம் வாசிக்கும் போதெல்லாம் நாம் அவர்கள் பற்றி எவ்வளவு குறைவாகவும் தவறாகவும் புரிந்து வைத்திருக்கிறோம் என்பது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

அப்பால் ஆன- வண்ணதாசன் சிறுகதை


அப்பால் ஆன- வண்ணதாசன் சிறுகதை கவிதை என்பது வேறு. சிறுகதையின் வடிவம் வேறு. இருந்தாலும் சில சிறுகதைகளில் படைப்பாளியின் கவித்துவம் வெளிப்படும். வண்ணதாசனின் “அப்பால் ஆன” சிறுகதையைப் படித்து முடித்ததும் ஒரு கவிதையின் அனுபவம் வாசகனின் மனதில் இழையோடும் கட்டாயமாக. “அப்பால் ஆன” என்னும் தலைப்பே பொருள் பொதிந்தது. எது அப்பால் ஆனது? எதற்கு அப்பால் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார் – அம்பை சிறுகதை


  கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார் – அம்பை சிறுகதை அம்பையின் சிறுகதைகளில் இது வடிவம் மற்றும் ஆழத்துக்கான கதை அல்ல. இருந்தாலும் அவர் எடுத்துக் கொண்ட விஷயம் அனேகமாக எல்லா மொழிச் சிறுகதைகளிலும் விவாதிக்கப் பட்டதே. மும்பையில் ஒரு ஞாயிறு காலையில் சிறிது தூரம் கடலில் படகிலும் பின்னர் பேருந்திலும் பயணித்து ஒரு இடத்துக்குப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஒரு தற்கொலை – ஆதவன் சிறுகதை


ஒரு தற்கொலை – ஆதவன் சிறுகதை எழுபதுகளில் தொடங்கி 1987 வரை 15 வருடத்துக்கும் மேலாகத் தீவிரமாக எழுதி வந்த ஆதவன் (இயற்பெயர் சுந்தரம்) கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் அரசுப் பணியிலேயே அவரது காலம் சென்றது. அவர் 42 வயதில் நதி நீரில் மூழ்கி இறந்தார். அது விபத்தா தற்கொலையா என்பது உறுதி செய்யப் பட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சாந்தா டீச்சர் – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை


சாந்தா டீச்சர் – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை நான் சமுதாயத்தில் இருந்து மாறு பட்டிருக்கிறேன் . என்னால் யாரோடும் ஒட்ட முடியவில்லை. அதே சமயம் என்னால் யாருக்கும் தொல்லை இல்லை. யார் மனதையும் நான் புண்படுத்தவுமில்லை. – இப்படி சொல்லிக் கொண்டு ஒருவர் ஒதுங்கி வேண்டுமானால் போகலாம். ஆனால் அதனால் சமுதாயம் மாறப் போகிறதா? மாறாத … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை


குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை கரிசல் காடு என அழைக்கப் படும் திருநெல்வேலிப் பக்க நாயக்கமார் பண்பாடு, சொல்லாடல் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான பல பதிவுகளுக்காக கி.ராஜநாராயணன் புகழ் பெற்றவர். மண் வாசனை மட்டுமல்ல கதை சொல்லியின் நடை ஒரு உறவினருடன் பேசும் அனுபவத்தையே நமக்குக் கொடுக்கும். தமிழ் இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

கொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை


கொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை மௌனி எழுதியவைகள் குறைவே. கொஞ்ச தூரம் என்னும் சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் தனது வீட்டிலிருந்து ஒரு சிற்றோடை வரை சென்று கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறான். ரோஜா என்னும் பெயரை எண்ணி அவளை நினைவு கூறுகிறான். பிறகு (உச்சி வெய்யிலில்) வீட்டுக்குத் திரும்பி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா?


சிறுகதை பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா? சத்யானந்தன் இரவு மணி பதினொன்றரை. பெர்த் அதிர்ந்தது ஒலியுடன். அரைத் தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் போது ரயில் டிக்கெட் பரிசோதிக்கும் டிடீஈ எழுப்பினார். எனது மொபைலில் இருந்த டிக்கெட் பற்றிய குறுஞ்செய்தியை அவரிடம் அந்த அரைத் தூக்கத்தில் காட்டுவது என்பது பெரிய சவாலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

அடையாளம்


http://puthu.thinnai.com/?p=16480 அடையாளம் சத்யானந்தன் சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment