Tag Archives: tirukkural

துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு


துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (அதிகாரம்: துறவு) யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால் நோதல் – துன்பம் எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு


என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (அதிகாரம் இன்னா செய்யாமை) துன்- துன்பப்படுத்து துன்னாமை – துன்பப் படுத்தாமை பொருள்: இது துன்பம் தருவது என தனது துன்பங்கள் என்று எவற்றை நீ காண்கிறாயோ, அந்தத் துன்பங்களை நீ மற்றவருக்குச் செய்யாக் கூடாது. (இந்தியாவில்) … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு


உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (அதிகாரம்: கொல்லாமை) பொருள்: தன்னுடைய உயிரே போனாலும் மற்றொரு உயிரைப் போக்கும் காரியத்தைச் செய்யாதீர்கள். சமண வழிக்கு ஷ்ரமண வழி (அல்லது மதம்)என்று பெயர். மிகுந்த கட்டுப்பாடுகள் உபவாசங்கள், புலால் மறுப்பு, புலன்களின் மீது … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு


உண்மை எப்போது பேசக் கூடாது? திருக்குறள் தெளிவு வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் எது உண்மை? எந்த உண்மையைச் சொல்ல வேண்டும்? இவை தான் பல மனித உறவுகளை, பல நல்ல திருப்பங்களைத் தீர்மானிக்கின்றன. 2006ல் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததை அறிவிப்பாளர் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

எப்படியும் வென்றால் தவறா? – திருக்குறள் தெளிவு


எப்படியும் வென்றால் தவறா? – திருக்குறள் தெளிவு வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து பொருள்: உன்னிலும் மெலியவரைத் தாக்க நீ நும் செல்லும் போது உன்னிலும் வலியர் (இதையே உனக்குச் செய்யக் கூடும்) பற்றி நினைவிற் கொள்வாய். (அதிகாரம்: அருள் உடைமை) பொருளோ, புகழோ, அதிகாரமோ நமது வலிமையைப் பொருத்தே அமையும். … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

யார் பெருமைக்குரியவர்? -திருக்குறள் தெளிவு


நடுவு நிலைமை – திருக்குறள் தெளிவு தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தார் காணப் படும் தக்கார் – தகுதியானவர் அல்லது பெருமைக்குரியவர் எச்சம்- எச்சம் என்றால் மிகுதி அல்லது மீந்தது என்று பொருள். இங்கே அது அவர் வாழ்ந்த நாட்களுக்குப் பிறகு அவர் பெயர் நிலைத்திருக்கு எஞ்சிய நாட்கள் என்று பொருள் படுகிறது. சினிமா … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

ஒரு உதவியின் பெருமையை எது தீர்மானிக்கிறது? – திருக்குறள் தெளிவு


செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் தெளிவு உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து உதவியைப் பெறுபவரின் சால்பு அதாவது பண்பைப் பொருத்தே உதவியின் பெருமை அல்லது மகத்துவம் அமைகிறது என்பது பொருள். ரத்த தானம் செய்வதை ஒரு பழக்கமாகவே கொண்டவர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியும். முன்பின் அறியாத ஒருவர் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

அன்பே உயிர் – திருக்குறள் தெளிவு


அன்பே உயிர் – திருக்குறள் தெளிவு அன்பின் வழிய துயிர்நிலை – அஃதிலார்க்(கு) என்பு தோல் போர்த்த உடம்பு உயிர் இருக்கிறதென்றால் அன்பு இருக்கிறது என்று பொருள். அன்பு இல்லாதவன் ஒருவனுக்கு இருப்பது எலும்பு மேல் போர்த்திய தோல் மட்டுமே. நடைபிணம் அவன் என்கிறார் வள்ளுவர். அன்பை எதிர் பார்ப்பவர் யாரென்று கேட்டால் உலகில் உள்ள … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

சரணாகதி – திருக்குறள் தெளிவு


சரணாகதி – திருக்குறள் தெளிவு தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் மக்கள் வெள்ளம். வரிசைகளில் மணிக்கணக்கில் நாட்கணக்கில் கூட நின்று தம் மனக் கவலையை, தன் கோரிக்கையை இறைவனின் முன்பு வைக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து வெளியே வந்ததுமே மீண்டும் கவலை தொற்றிக் கொள்கிறது. நாம் விரும்பியது … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , , , | Leave a comment

எது அறம்? – திருக்குறள் தெளிவு


எது அறம்? – திருக்குறள் தெளிவு மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற மதம் என்னும் வழிபாட்டு முறைக்கான வள்ளுவரின் விளக்கமே இக்குறள். மதம் என்னும் பெயர் வழிபாட்டு முறைக்கும் அது தொடர்பான நம்பிக்கைகளுக்கும் வந்தது கடந்த ஓரு நூற்றாண்டில் தான். புராதன இந்தியாவில் மதம் தர்மம் என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டது. அரசனுக்கும் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , , | Leave a comment